பிரச்சினை இருந்தா பாட்டு வராதா? ‘கோட்’ பட பாடல்கள் ஹிட்டாகாததற்கு இதுதான் காரணமா?
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் கோட். விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் தயாராகியிருக்கும் திரைப்படம்தான் கோட். படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி சௌத்ரி நடித்திருக்கின்றனர். மேலும் படத்தில் பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.
மோகன் கோட் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மோகன் பற்றி எந்தவித புகைப்படமோ போஸ்டரோ இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் படத்தில் அமைந்த மூன்று பாடல்களும் சோசியல் மீடியாவில் வெளியானது.
வெளியான மூன்று பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவில் வரவேற்பை பெறவில்லை. சமீபத்தில் வெளியான மூன்றாவது சிங்கிள் கடும் ட்ரோலுக்கு ஆளாகியிருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவை ஒரு பக்கம் விஜயை ஒரு பக்கம் என மாறி மாறி ட்ரோல் செய்து வருகின்றனர்.
இதை பற்றி வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் கூறும் போது ஒரு காலத்தில் இளசுகளை தன் இசையால் கட்டிப் போட்டு வைத்தவர் யுவன் என கூறியிருக்கிறார். அவர் சொன்னதை போல் செல்வராகவனின் எல்லா படங்களுக்கும் யுவன் தான் இசையமைத்திருப்பார்.
7ஜி ரெயின்போ காலனி படம் இசைக்காகவே ஓடியது. ஆல்பம் ஹிட்டாக மாறியது. அதே போல் பொல்லாதவன் படத்திற்கும் யுவன் தான் இசை. அதுவும் ஆல்பம் ஹிட்டுதான். இப்படி இருந்த யுவன் விஜயுடன் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இணைந்திருக்கிறார். அப்போ எந்த மாதிரியான பாடலை கொடுத்திருக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இதில் ஒரு கடுமையான விமர்சனம் தன்னை பாதித்ததாக வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார். அதாவது யுவன் இந்துவாக இருந்த போது நல்ல நல்ல இசையில் பாடல்களை போட்டு வந்தார் என்றும் இஸ்லாமியராக மாறிய பிறகுதான் அவருடைய பாடல்கள் எதுவும் சரியில்லை என்றும் விமர்சித்தார்களாம். இதைப் பற்றி வலைப்பேச்சு அந்தணன் கூறும் போது ஒரு மதத்தை வைத்து இப்படியெல்லாம் விமர்சிப்பது சரியா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் அந்தணன்.
அதுமட்டுமில்லாமல் சூழ்நிலையும் ஒரு மனிதரை புத்தி இழக்க செய்யும் என்றும் அந்தணன் கூறினார். அப்படித்தான் யுவனுக்கும் நடந்ததாம். அதாவது யுவனின் வீட்டு சூழ்நிலை சரியில்லை என்றும் சொத்துப் பிரச்சினையில் தகராறு நடந்து கொண்டிருப்பதாகவும் அவருடைய அண்ணன் கார்த்திக் ராஜா இப்பொழுதே தன் சொத்தை பிரித்து கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.
இதோடு அவருடைய சகோதரியான பவதாரிணி இழப்பும் பெரும் துக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். இப்படி தன்னை சுற்றி இந்த மாதிரியெல்லாம் பிரச்சினை நடக்கும் போது யுவனால் இசையில் கவனம் செலுத்த முடியாமலும் போயிருக்கலாம் என்றும் அந்தணன் கூறினார்.