போதும்..வலிக்குது.. அழுதுருவேன்! ‘லேடி சூப்பர் ஸ்டார் வேண்டாம்’னு சொன்னதுக்கு இதுதான் காரணமா?

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன் தொடர்ந்து சந்திரமுகி, ஏகன், யாரடி நீ மோகினி போன்ற பல படங்களில் நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார். ஆரம்பத்தில் மிகவும் கவர்ச்சியான உடையணிந்து நடித்து வந்த நயன் சமீபகாலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார்.

இப்போது கூட மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை நடந்து சீக்கிரமே அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் நயன்தாரா அவருக்கு கொடுக்கப்பட்ட லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை வேண்டாம் என சொல்லி அறிக்கை விட்டிருந்தார். இதற்கு முன் கமல், அஜித் இருவரும் அவரவர் பட்டத்தை துறந்தார்கள். அந்த வரிசையில் இப்போது நயனும் இணைந்திருக்கிறார்.

ஏன் இந்த திடீர் அறிவிப்பு என ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் குழம்பி போயிருந்தனர். அதற்கேற்ப அவரின் ஒரு பழைய பேட்டியும் வைரலாகி வந்தது. அதில் அவர் கூறியது இந்த அறிக்கைக்கு காரணமாக கூட இருக்கலாம் என ரசிகர்களும் அதை கனெக்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர். இதோ அவர் பகிர்ந்த தகவல்:

விஜே அர்ச்சனா நயன்தாராவை பார்த்து லேடி சூப்பர் ஸ்டார்னு சொல்லும் போது ‘ஐய்யோ ப்ளீஸ் அத மட்டும் சொல்லாதீங்க.. திட்ராங்க’ என நயன் கூறியிருப்பார். உடனே அர்ச்சனா ‘எவன் அவன்? எதுக்கு திட்ராங்க’ என கேட்பார். அதற்கு நயன்தாரா இன்னும் அந்த இடத்துக்கு வரலையா இல்ல ஒரு பொண்ணா இருக்கிறதுனால அப்படி ஒரு டேக் இருக்கக் கூடாதுனு நினைக்கிறாங்களானு தெரியல.

ஆனால் ஒவ்வொரு முறையும் அப்படி ஒரு டேக் வைத்து கூப்பிடும் போது ஒரு பத்து பேர் ரொம்ப பெருமையா பேசுவாங்க. 50 பேர் திட்டுவாங்க. ஆனால் இதை நோக்கி என்னுடைய பயணம் கிடையாது. அதாவது எந்த வகையான ஸ்கிரிப்டு தேர்ந்தெடுக்கணும்? என்ன மாதிரியான கேரக்டரில் நடிக்கணும் என்பது அந்த பேரை காப்பாத்துக்கிறதுக்காக கிடையாது. அந்த பட்டம் எல்லாருமே எனக்கு கொடுத்த அன்பு என நயன்தாரா அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

ஆனால் ரசிகர்கள் சில பேர் திட்டியது அவருக்கு கொஞ்சம் வேதனையை ஏற்படுத்தியிருக்கக் கூடும். அதனால்தான் திடீரென அந்த அறிக்கையை வெளியிட்டு இனிமேல் என்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என கூப்பிட வேண்டாம் என சொல்லியிருக்கிறார். அல்லது இதைவிட மோசமான கமெண்ட் கூட வந்திருக்கலாம். எப்படியோ ஒரிஜினல் பேரை சொல்லி அழைக்க சொல்லியிருக்கிறார் நயன்.

Next Story