சம்பளமே வேண்டாம் என சொல்லியும் ‘ஜீன்ஸ்’ படத்தில் பிரசாந்தை நோ சொன்ன ஷங்கர்! ஏன்னு தெரியுமா?
ஜெண்டில்மேன், காதலன் போன்ற தொடர் வெற்றிக்கு பிறகு ஷங்கரின் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பில் இருந்த திரைப்படம் ஜீன்ஸ். அந்தப் படத்தின் டிஸ்கஷன் சமயத்தில் தியாகராஜன் ஜீன்ஸ் படத்தில் எப்படியாவது பிரசாந்தை நடிக்க வேண்டும் என்ற ஆசையில் ஷங்கருக்கு நெருங்கிய நண்பரும் மூத்த பத்திரிக்கையாளருமான திண்டுக்கல் வெங்கடேஷனிடம் சொல்லி ஷங்கரிடம் பேச சொல்லியிருக்கிறார்.
வெங்கடேஷனும் ஷங்கரிடம் பிரசாந்த் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறார் என்று கூற தியாகராஜனையும் ஷங்கரையும் பேச வைத்திருக்கிறார். அப்போது ஜீன்ஸ் படத்தை தானே தயாரிக்கிறேன். ஷங்கருக்கு எவ்ளோ சம்பளம் வேண்டுமானாலும் தருகிறேன். ஆனால் பிரசாந்த் நடிக்க வேண்டும் என்று தியாகராஜன் கூறினாராம்.
ஆனால் ஷங்கர் ஜீன்ஸ் பட கதை எழுதும் போது அஜித்தை மனதில் வைத்தேதான் எழுதினாராம். அதனால் வேறொரு கதை ரெடியாகும் போது பிரசாந்தை நடிக்க வைக்கிறேன் என ஷங்கர் கூறினாராம். ஆனால் வெங்கடேஷனிடம் தியாகராஜன் எப்படியாவது பிரசாந்தை நடிக்க வைக்க வேண்டும். ஷங்கரிடம் எப்படியாவது பேசி சம்மதிக்க வை என சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் சம்பளமே வேண்டாம். பிரசாந்த் நடித்தால் போதும் என்ற மன நிலைக்கே வந்திருக்கிறார் தியாகராஜன்.
ஆனால் ஷங்கர் விடாப்பிடியாக அஜித்தை மனதில் வைத்திருந்தனால் ஜீன்ஸில் பிரசாந்தை நடிக்க வைக்க ஒத்துக்கவே இல்லையாம். ஆனால் இதற்கு பின்னாடி ஒரு காரணமே இருந்திருக்கிறது. காதலன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது பிரசாந்த்தானாம். காதலன் படத்தை பிரசாந்தை மனதில் வைத்து எழுதினாராம் ஷங்கர். அந்த நேரத்தில் தியாகராஜன் பிரசாந்திற்காக அதிக சம்பளம் கேட்டாராம். ஆனால் குஞ்சுமோன் இவ்ளோ சம்பளம் கொடுக்க முடியாது என கூறியிருக்கிறார்.
ஆனால் தியாகராஜன் சம்பளத்தில் கறாராக இருந்தாராம். அதனாலேயே பிரசாந்த் காதலன் படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். அதன் பிறகுதான் பிரபுதேவா படத்திற்குள் நுழைந்திருக்கிறார். அந்த நேரத்தில் பிரசாந்தின் மார்கெட் உயர்ந்திருந்தது. அதனால் அதிகளவு சம்பளம் பேசினார் தியாகராஜன். ஆனால் ஜீன்ஸ் சமயத்தில் இழந்த பிரசாந்தின் மார்கெட்டை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற காரணத்தினால் படத்தில் நடித்தால் போதும். சம்பளமே வேண்டாம் என்ற நிலையில் இருந்திருக்கிறார் தியாகராஜன்.
இதையெல்லாம் மனதில் வைத்துதான் ஷங்கர் ஜீன்ஸ் படத்தில் பிரசாந்தை நடிக்க வைப்பதற்கு தயங்கியிருக்கிறார். ஆனால் ஜீன்ஸ் கதை பற்றி ஷங்கர் அஜித்திடம் சொல்லவே இல்லையாம். அதனால் அஜித்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எப்படியோ ஷங்கரை சம்மதிக்க வைத்து பிரசாந்தை நடிக்க வைத்திருக்கிறார் தியாகராஜன் என மூத்த பத்திரிக்கையாளர் வெங்கடேஷன் கூறினார்.