5 வருடத்திற்கு முன்பே அஜீத்திடம் சொன்ன கதை... இப்போது தான் விடிவுகாலம்... என்ன படம்னு தெரியுமா?

by ராம் சுதன் |

அல்டிமேட் ஸ்டார் அஜீத்குமார் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதன் இறுதிகட்டப் பணிகள் நடந்து வருகிறது.

இந்தப் படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். அஜீத்துடன் இணைந்து திரிஷா, அர்ஜூன், ரெஜினா கசான்ட்ரா, ஆரவ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தை 2025 ஜனவரி 9ம் தேதி பொங்கல் தினத்தையொட்டி ரிலீஸ் செய்கிறார்கள். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட்பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்திலும் அஜீத், திரிஷா தான் ஜோடி. பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில், ராகுல் தேவ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். 2019ல் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜீத் நடித்து வரும்போதே ஆதிக் ரவிச்சந்திரன் அவரை சந்தித்து இந்தக் கதையைக் குறித்துப் பேசினாராம்.

அப்போது தயாரிப்பாளர் வரும் வரை காத்திருப்போம். அதன்பிறகு முடிவு பண்ணலாம். கதை எனக்குப் பிடித்திருக்கிறது என்றாராம் அஜீத். அந்தவகையில் இந்தப் படத்திற்கு இப்போது விமோசனம் கிடைத்துள்ளது. படத்தின் இசை அமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத். மைத்ரி மூவீ மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

வீரம் படத்திற்குப் பிறகு தேவி ஸ்ரீ பிரசாத் இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றுகிறார். மேற்கண்ட இரு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அஜீத்துக்கு விஸ்வாசம் படத்திற்குப் பிறகு பொங்கல் தினத்தில் வெளிவரும் படமாக விடாமுயற்சி அமைந்துள்ளது.

அஜீத் படங்கள்ல அவரோட சாதாரண நடை கூட ஒரு ஸ்டைலாகத் தான் இருக்கும். அவரது பேசும் ஸ்லாங் ரசிகர்களை ரொம்பவே கவரும். தவிர அவரோட பஞ்ச் டயாலாக்கும், டான்ஸ் மூவ்மெண்ட்டும் செம மாஸாக இருக்கும்.

அந்தவகையில் அஜீத் படங்கள் வந்தாலே ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் தான். இந்த ஆண்டு அவர்களுக்கு தல தீபாவளி வரவில்லை. ஆனால் தல பொங்கல் வருவதால் அவர்கள் ரொம்பவே உற்சாகத்தில் உள்ளனர். விடாமுயற்சி வெற்றி தரும் என்பது மெய்யாகுமா என்று பார்ப்போம்.

Next Story