மூன்று வேடங்களில் நடித்த நடிகர்கள்! இந்த லிஸ்ட்ல இவருமா இருக்காரு?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:39:14  )

தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் இரட்டை வேடங்களில் நடிப்பது என்பது எளிதாகிவிட்டது. ஆனால் ஆரம்பகாலத்தில் இரட்டை வேடம் என்றால் அவ்வளவு ஆச்சரியமாக பார்த்தார்கள். அந்த மாதிரி படங்கள் வெளியாகும் போது அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் எல்லாமே ஈஸியாகிவிட்டது. இரட்டை வேடங்களில் எம்ஜிஆர் முதல் இந்த கால நடிகர்கள் வரை அனைவருமே நடித்து விட்டனர்.

ஆனால் இரண்டு வேடங்களைத் தாண்டி பல வேடங்கள் போட்டு நடித்த நடிகர்கள் குறிப்பிட்ட சில பேர் மட்டும்தான். சிவாஜி நவராத்திரி படத்தில் ஒன்பது வேடங்களில் நடித்திருப்பார். கமல் பத்து வேடங்களில் தசாவதாரம் படத்தில் நடித்திருப்பார். அதை போல் விக்ரம் 7 வேடங்களில் கோப்ரா படத்தில் நடித்திருப்பார்.

இதில் மூன்று வேடங்களில் நடித்த நடிகர்களை பற்றித்தான் பார்க்கப் போகிறோம். நடிகர் விஜய் மெர்சல் படத்தில் மூன்று வேடங்களில் நடித்திருப்பார். அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது. விஜயும் அவருடைய கதாபாத்திரத்தை சரியான முறையில் ஏற்று நடித்திருப்பார்.

அடுத்ததாக ரஜினி மூன்று முகம் படத்தில் நடித்திருப்பார். அதில் போலீஸ் கேரக்டரில் வரும் ரஜினியை தான் அனைவரும் விரும்பினார்கள். அந்த கெட்டப்பில் அவர் நடந்து வரும் தோரணை அனைவராலும் ரசிக்கும் படியாக அமைந்தது.

அடுத்து சிவாஜி நடிப்பில் வெளியான தெய்வ மகன் படத்தை சொல்லலாம். அப்பா மற்றும் இரு மகன்கள் என மூன்று வேடங்களில் சிவாஜி நடித்திருப்பார். அதில் மகன் கதாபாத்திரத்தில் வரும் ஒரு சிவாஜியின் முகம் கோரமாக இருக்கும். அதே வகையில் கரு நிறமாக இருக்கும். அந்த கேரக்டரில் மிக அற்புதமாக நடித்திருப்பார் சிவாஜி.

அடுத்ததாக வரலாறு படம். அஜித் மூன்று வேடங்களில் கலக்கிய திரைப்படம். அதில் அப்பா அஜித் ஒரு பெண் குணத்தை போன்ற கதாபாத்திரத்தில் வருவார். ஒரு பெரிய ஹீரோ இப்படிப்பட்ட கேரக்டரில் நடிக்க தயங்கும் நிலையில் துணிந்து நடித்து படத்தை வெற்றிப்படமாக்கினார் அஜித்.

அடுத்ததாக சத்யராஜ் நடித்த வில்லாதி வில்லன் திரைப்படம். இதில் ஒரு கோமாளித்தனம் கலந்த வில்லன் கேரக்டரில் வரும் சத்யராஜ்தான் ரசிகர்களிடம் பெரிய அப்ளாஸை வாங்கினார். இப்படி சூர்யா நடிப்பில் 24 மற்றும் விஜயகாந்த் நடிப்பில் சிம்மாசனம் போன்ற படங்களை குறிப்பிடலாம். இவர்கள் வரிசையில் வடிவேலுவும் இணைந்திருக்கிறார். அவர் மூன்று வேடங்களில் நடித்த இந்திர லோகத்தில் நா அழகப்பன் படமும் அடங்கும்.

Next Story