இந்த வருடம் எத்தனையோ தமிழ் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றன. அதுவும் எதிர்பார்ப்பை அதிகளவு ஏற்படுத்திவிட்டு ஏமாற்றிய திரைப்படங்கள் தான் அதிகம். அந்த வகையில் எந்தெந்த திரைப்படங்கள் எதிர்பார்ப்பை எகிற வைத்து ஏமாற்றிய திரைப்படங்கள் என்பதை தான் இந்த செய்தியில் பார்க்க இருக்கிறோம்.
ஸ்டார்: கவின் நடிப்பில் உருவான திரைப்படம் தான் ஸ்டார். இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்ததற்கு காரணம் முதலில் ஹரிஷ் கல்யாண் சிவப்பு ரோஜாக்கள் கமல் மாதிரி என வின்டேஜ் நடிகர்களின் கெட்டப்களில் தொடர்ந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் எகிற வைத்த திரைப்படம் தான் ஸ்டார்.
அதன் பிறகு ஹரிஷ் கல்யாண் இந்த படத்தில் இருந்து விலக கவின் ஹீரோவாக இந்த படத்திற்குள் வந்தார். ஆனால் அப்பொழுதே நாம் உஷாராக இருந்திருக்க வேண்டும். ஆனால் ஹரிஷ் நடிப்பையும் மிஞ்சும் அளவுக்கு கவின் மிகச் சிறப்பாக நடிப்பார் என்ற ஒரு நம்பிக்கை நம்மிடையே இருந்ததினால் தான் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் படத்தின் கதைப்படி சினிமாவில் நடிகராக வேண்டும் என்பதற்காக ஒருவன் எப்படியெல்லாம் கஷ்டத்தை அனுபவிக்கிறான் என்பது தான் இந்த படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. ஆனால் சினிமாவிற்கு என்னென்ன தேவை என்பதை இயக்குனர் சொல்ல மறந்து விட்டார்.
லால் சலாம்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லால் சலாம். இந்த படத்தின் மீது அதிக அளவு எதிர்பார்ப்பு உருவாக காரணமாக அமைந்தது ரஜினி கேமியோ ரோலில் நடித்தது தான். ஆனால் டைரக்ஷன் திரைக்கதை என எதுவுமே தெரியாத ஒருவரிடம் ஒரு பெரிய நடிகரின் கால்ஷீட்டை கொடுத்தால் எப்படி எல்லாம் படத்தை சொதப்பி வைக்க முடியுமோ அப்படி வைத்திருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
சைரன்: ஜெயம் ரவி கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சைரன். ஒட்டுமொத்தமாக இந்தப் படத்தை கழுவி ஊற்றாதவர்களை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு ஜெயம் ரவியின் கெரியரில் இந்தப் படம் பெரிய ஒரு ஏமாற்றத்தை தந்தது. படத்தில் நடித்த அத்தனை பேருமே பெரிய பெரிய கலைஞர்கள். ஆனால் அவர்களை வைத்து எப்படிப்பட்ட ஒரு கதையை அமைக்க வேண்டும் ?அதையெல்லாம் விட்டுவிட்டு கிடைத்த கதையில் படத்தை எடுத்து முடித்தார் படத்தின் இயக்குனர்.
ரிபெல்: ஜீவி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ரிபெல். ஜிவி பிரகாஷ் கெரியரில் மிகவும் மொக்க வாங்கிய திரைப்படமாக இந்த படம் அமைந்தது. தமிழ்நாட்டில் இருந்து பாலக்காடுக்கு படிக்க போகும் ஒருவனுக்கும் மலையாளி ஒருவனுக்கும் இடையே ஏற்படும் அந்த பிரச்சினை தான் இந்த படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. இருந்தாலும் படத்தின் ஸ்கிரீன் ப்ளே சுத்தமாக ரசிகர்களை கவரவில்லை. ஜீவியை எப்படியாவது சறுக்க வைக்க வேண்டும் என்பதற்காக எடுத்த படம் மாதிரி இந்த ரிபெல் திரைப்படம் அமைந்தது.
ரத்னம்: விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் ரத்னம். விஷாலை தாண்டி ஹரியின் இயக்கத்தில் ஒரு படம் எனும் போது ரசிகர்கள் மத்தியில் கூடுது எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் இந்த படத்தை பார்த்த பிறகு ஒரு வேளை ஹரியிடம் சரக்கு தீர்ந்து போச்சா? விசாலிடம் சரக்கே இல்லையா என்று கேட்கும் அளவுக்கு ரசிகர்களை இந்த படம் ஆளாக்கியது.
ஹரியின் படங்களைப் பொறுத்த வரைக்கும் திரைக்கதை, சென்டிமென்ட், காதல்,பாடல் என எல்லா இடத்திலும் அவருடைய மெனக்கிடல் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த படத்தில் ஒன்றுமே இல்லை எனும் போது தான் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெரிதாக பேசப்படவில்லை.
Vijay serials:…
கங்குவா படம்…
கங்குவா படம்…
தமிழ் சினிமாவில்…
கங்குவா திரைப்படம்…