இரு நடிகர்களை மட்டும் ஒதுக்கி வைத்து நடந்த சூர்யா - ஜோதிகா திருமணம்! அப்படி என்ன செஞ்சாங்க?
இன்று சூர்யா தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். ஜூலை மாதம் ஆரம்பமானதில் இருந்தே சூர்யாவின் ரசிகர்கள் அவர் பிறந்த நாளை ஒட்டி இரத்த தானம் செய்து வந்தனர். சூர்யாவும் நேற்று இரத்த தானம் செய்தார். இன்று அவருடைய பிறந்த நாளுக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். கோலிவுட்டில் ஒரு முக்கிய நட்சத்திர அந்தஸ்தில் இருப்பவர் நடிகர் சூர்யா.
நேருக்கு நேர் படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமான சூர்யாவை ஒரு நட்சத்திர ரேஞ்சுக்கு உயர்த்தியதில் இயக்குனர் பாலாவுக்கும் கௌதம் மேனனுக்கும் முக்கிய பங்கு உள்ளது. பாலா சூர்யாவின் நடிப்பை வெளிப்படுத்தியதில் காரணமாக இருந்தார். அதே போல் கௌதம் மேனன் சூர்யாவை ஒரு ஸ்டைலிஷான ஹீரோவாக மாற்றியதில் காரணமாக இருந்திருக்கிறார்.
அதை இன்னமும் பின்பற்றி வருகிறார் சூர்யா. இந்த நிலையில் சூர்யா ஜோதிகாவை காதலித்து கிட்டத்தட்ட 4 வருடங்கள் கழித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணத்திற்கு ஆரம்பத்தில் சிவக்குமார் சம்மதம் தெரிவிக்கவே இல்லை என அனைவருக்கும் தெரியும். ஒரு நடிகையை திருமணம் செய்வதா என்ற வகையில் கேள்வி எழுப்பியதாக அந்த நேரத்தில் கூறப்பட்டது.
இருந்தாலும் தன் காதலில் உறுதியாக இருந்த சூர்யா காத்திருந்து ஜோதிகாவை கரம் பிடித்தார்.திருமணத்திற்கு எத்தனையோ பிரபலங்கள் கலந்து கொண்டாலும் அன்றைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவும் எதிர்கட்சித்தலைவராக இருந்த கருணாநிதியும் கலந்து கொண்டதுதான் பெரும் பேசு பொருளாக மாறியது.
ஏனெனில் செலிபிரிட்டியாக இருக்கும் பட்சத்தில் ஒரு கல்யாணத்திற்கு செல்வதாக இருந்தால் சில விதிமுறைகளை கடைபிடிப்பார்கள். அந்த வகையில் சூர்யா திருமணத்திற்கு கருணாநிதி சீக்கிரமாகவே சென்று விட்டாராம். போனவர் வெகு நேரமாகியும் கிளம்பாமல் அங்கேயே இருந்தாராம். அவர் கிளம்பிய பிறகுதான் ஜெயலலிதா வர வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.
ஆனால் கருணாநிதி வேண்டுமென்றே அங்கு இருந்ததாக இந்த செய்தியை பகிர்ந்த வலைபேச்சு அந்தனன் கூறினார். இதனால் திருமண வீட்டில் பெரும் பரப்பரப்பு சூழ்ந்து கொண்டதாகவும் அந்தனன் கூறினார். எப்படியோ ஒரு வழியாக கருணாநிதி கிளம்ப அதன் பிறகு ஜெயலலிதா வந்தாராம். இப்படி திரையுலகைசேர்ந்த அனைவரும் சூர்யா திருமணத்திற்கு வர இரு நடிகர்கள் மட்டும் வரவே இல்லையாம். அவர்கள் வேறு யாருமில்லை. நடிகர் விக்ரம் மற்றும் சிம்பு. அவர்களுக்கு அழைப்பிதழே கொடுக்கவில்லை என்றும் வலைப்பேச்சு அந்தணன் கூறினார். அதற்கான காரணத்தை அந்தனன் கூறவில்லை.