தமிழ் சினிமாவில் வரலாறு சம்பந்தப்பட்ட எத்தனையோ படங்கள் வெளிவந்திருக்கின்றன. சிவாஜி எம்ஜிஆர் காலத்தில் இருந்து இன்றுவரை ஏகப்பட்ட வரலாற்று சம்பந்தமான படங்களை நாம் கண்டு களித்து இருக்கிறோம். ஆனால் அந்த காலத்திற்கும் இந்த காலத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மட்டுமே.
இப்போது உள்ள தகவல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப நிறைய கிராபிக்ஸ் வேலைகளுடன் படங்களை பார்க்கும் பொழுது இன்னும் நமக்கு சுவாரசியமாக இருக்கின்றது. அந்த வகையில் வெளிவராத சில வரலாற்று திரைப்படங்களை பற்றி தான் இந்த செய்தியில் நாம் பார்க்க இருக்கிறோம்.
அதில் முதலாவதாக சங்கமித்ரா திரைப்படம். சுந்தர் சி இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர் நடிப்பில் தயாரான திரைப்படம் தான் இந்த படம். ரசிகர்களின் எதிர்பார்ப்பு இந்த படத்தின் மீது அதிகமாகவே இருந்தது. இதுவும் அந்த கால ராஜாக்களைப் பற்றி அமைந்த ஒரு திரைப்படமாகத் தான் சுந்தர் சி எடுப்பதாக இருந்தது. அதுவும் மிகப்பெரிய பொருள் செலவில் எடுப்பதாக இருந்தது. அதன் காரணமாகவே தான் இந்த படம் ட்ராப்பானது என்று சொல்லப்படுகிறது.
இருந்தாலும் இந்த படம் கண்டிப்பாக வெளிவரும் என சுந்தர் சி நம்பிக்கொண்டு இருக்கிறார். அடுத்ததாக கரிகாலன் திரைப்படம். கண்ணன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் விக்ரம் நடிப்பில் உருவாக இருந்த திரைப்படம் தான் இந்த கரிகாலன் திரைப்படம். இந்த படத்திற்கான பட்ஜெட்டும் அதிகமாக இருந்ததனால் இந்த படத்தை ட்ராப் செய்ததாக சொல்லப்படுகிறது. பொன்னியின் செல்வனுக்கு முன்பே கரிகால சோழனாக இந்த படத்தில் விக்ரம் நடித்திருந்தார். அதனால் இந்த படத்தின் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் தான் நின்று போனது.
அடுத்ததாக ராணா திரைப்படம். கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருந்த திரைப்படம் தான் இந்த ராணா படம். இந்த படத்தின் மீது ரசிகர்களை விட கே எஸ் ரவிக்குமார் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார். ஏனெனில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரஜினியை வைத்து எடுக்க இருந்த திரைப்படமாக இந்த படம் அமைந்தது. ஆனால் இந்த படத்தின் போது ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் இந்த படத்தை அப்படியே நிறுத்திவிட்டார்கள்.
அடுத்ததாக உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த திரைப்படம் மருதநாயகம் திரைப்படம். இந்த படத்தின் துவக்க விழாவை மிக பிரம்மாண்டமாக கமல் ஏற்பாடு செய்திருந்தார். பிரிட்டன் இளவரசி எலிசபெத் இந்த படத்தின் துவக்க விழாவிற்கு வருகை புரிந்து படத்தின் ஹைப்பையே மாற்றி இருந்தார்கள். ஆனால் இந்தப் படத்திற்கும் பட்ஜெட் அதிகமானதால் படத்தை எடுக்க முடியாமல் அப்படியே நிறுத்திவிட்டார்கள். இருந்தாலும் மருதநாயகம் திரைப்படம் மறுபடியும் எடுக்கப்படும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருந்தாலும் அதற்கான ஒரு சரியான பதிலை கமல் இதுவரை கூறவில்லை.
நடிகர் ரஜினி…
சுதா கொங்கரா…
இயக்குனர் விக்ரமனிடம்…
தமிழ் சினிமா…
சுதா கொங்கரா…