விஷ்ணு விஷால், நயன் செய்த அட்ராசிட்டிஸ்! தயாரிப்பாளர்கள் அறிக்கை விட்டதற்கான பின்னணி
தமிழ் சினிமா ஒரே சலசலப்பில் இருக்கிறது. நடிகர் சங்கத்தும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையே சில பல கருத்து வேறுபாடு ஏற்பட்டு அறிக்கை ஒன்றை தயாரிப்பு கவுன்சில் அனுப்பியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அக்டோபர் மாதத்திற்குள் எடுக்க வேண்டிய சூட்டிங்கை முடித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஸ்டிரைக் என்பதை அறிவித்திருக்கிறார்கள்.
இது நடிகர் சங்கத்துக்கு பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதை பற்றி நேற்று பத்திரிக்கையாளர்களிடம் நடிகர் சங்க பொருளாளர் நடிகர் கார்த்தி எங்களிடம் கலந்தாலோசிக்காமல் தயாரிப்பாளர் சங்கம் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் ரெட் கார்ட் போட்டதும் எங்களுக்கு தெரியாது என்றும் அதுவும் தனுஷ் பிரச்சினை பற்றியும் எங்களுக்கு தெரியவே தெரியாது என்றும் கார்த்தி கூறியிருந்தார்.
ஆனால் கோடம்பாக்கத்தில் பல முறை நடிகர்களை பற்றி நடிகர் சங்கத்திடம் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது வரை சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீது நடிகர் சங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பேச்சுவார்த்தைக்கு கூட நாசரோ, விஷாலோ, கார்த்தியோ வருவதில்லை. அவர்களுக்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே வந்து பேசுகிறார்கள். இப்படி இருக்கும் போது நடிகர் சங்கத்தை நம்பி என்ன பயன்?
இதனாலேயேதான் தயாரிப்பாளர் சங்கம் இந்த மாதிரி முடிவை எடுத்திருப்பதாக கோடம்பாக்கத்தில் பேசி வருகிறார்கள். அவர்கள் கூறுவதை போல் பெரிய பெரிய நடிகர்கள், நடிகைகள் தங்களுக்கான சம்பளத்தையும் வாங்கிக் கொண்டு தனக்கு உதவியாளர்களாக 10 அல்லது 15 பேரை அழைத்து வருவதோடு அவர்களுக்கும் தயாரிப்பாளர்கள்தான் சம்பளம் கொடுக்க வேண்டும் என கூறுவது எந்தவிதத்தில் நியாயம் என்றும் சொல்லப்படுகிறது.
உதாரணமாக நயன் அவர் சம்பளத்தோடு அவருக்கு உதவியாளராக வருபவர்களுக்கு ஒரு லட்சம் கேட்பதாக சொல்லப்படுகிறது. அதே போல் சந்திரமுகி படத்திற்காக கங்கனா ரனாவத்தும் அவருக்கு உதவியாளராக வந்தவர்களுக்கு 6 லட்சம் கேட்டாராம். இதில் கூடுதல் தகவல் என்னவெனில் லால் சலாம் படத்தின் போது ரஜினியே தனக்கு உதவியாளராக இரண்டு பேரை மட்டும்தான் அழைத்து வந்திருக்கிறார்.
ஆனால் விஷ்ணு விஷாலே கிட்டத்தட்ட 18 பேரை அழைத்து வந்தாராம். அதன் பிறகு ரஜினி விஷயம் தெரிந்து இரண்டு பேரை தவிற மீதம் 16 பேரை போக சொல்லிவிட்டாராம். இப்படி நடிகர்கள் செய்யும் அட்ராசிட்டியால் தயாரிப்பாளர்களின் நிலைமைதான் மோசமாகிக் கொண்டே வருகின்றன. இன்னொரு பக்கம் தயாரிப்பாளர்களும் ஒரே குடும்பமாக இருந்து நடிகர்களுக்கு என ஒரு கட்டுப்பாடு விதித்து அதை அனைத்து தயாரிப்பாளர்களும் பின்பற்றி வந்தார்கள் என்றால் நடிகர்கள் செய்யும் இந்த அட்ராசிட்டியை அடக்க முடியும் என கூறி வருகிறார்கள்.