என்ன சிவா.. துப்பாக்கிய கொடுத்தவருக்கே டாட்டா காட்டிட்டீங்க? VPக்கு இந்த நிலைமையா?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:39:43  )

கோலிவுட்டில் இப்போது அடுத்ததாக விஜய் இடத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படுபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அதுக்கு மேலும் உறுதிப்படுத்தும் விதமாக கோட் படத்தில் விஜய் சிவகார்த்திகேயனிடம் இந்த துப்பாக்கியை புடிங்க சிவா என கொடுப்பதும் அதற்கு சிவகார்த்திகேயன் இனிமேல் இவங்கள நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் உங்க வேலையை பாருங்க என சொல்வதும் இதை உறுதிப்படுத்தியது.

அதிலிருந்தே விஜய் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை கொண்டாட ஆரம்பித்து விட்டனர். அதற்கு முன்பே சிவகார்த்திகேயன் அவருடைய படங்களின் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார் என்பதுதான் உண்மை. விஜயை போலவே சிவகார்த்திகேயனும் குழந்தைகளின் ஆதரவையும் பெற்றார்.

இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அந்தப் படம் வரும் 31 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. ஏற்கனவே ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படம் விஜயின் துப்பாக்கி படம் போல் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இந்தப் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் பேஷன் ஸ்டூடியோ தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தியுடன் ஒரு படத்தில் நடிக்கப் போவதாக சொல்லப்பட்டது. ஆனால் சிவகார்த்திகேயன் அவர்களை காக்க வைத்துவிட்டு சுதா கொங்கராவுடன் இணைந்து புறநானூறு படத்தில் நடிக்கப் போவதாக சொல்லப்படுகிறது.

இந்தப் படத்திற்கு பிறகு தான் சிபி ச்ககரவர்த்தியுடன் சிவகார்த்திகேயன் இணைவார். இதற்கு மத்தியில் வெங்கட் பிரபுவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதுக்கு இப்போதெல்லாம் வாய்ப்பே இல்லை என்று கோடம்பாக்கத்தில் கூறிவருகிறார்கள்.

Next Story