Cinema News
நயன்தாரா படத்தில் சித்தார்த் வெளுத்து வாக்குறாரே.. பாவம் இந்த பர்ஃபார்மன்ஸ் தியேட்டருக்கு வரலையே!
The Test: தமிழ் சினிமாவில் சில படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட்டு வரும் நிலையில் தற்போது தி டெஸ்ட் திரைப்படமும் இந்த லிஸ்ட்டில் இணைந்து இருக்கும் நிலையில் அடுத்தக்கட்ட அப்டேட் வெளியாகி இருக்கிறது.
‘தி டெஸ்ட்’ படத்தில் சித்தார்த் மட்டுமின்றி, மாதவன் மற்றும் நயன்தாரா உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சித்தார்த்தின் மனைவியாக மீரா ஜாஸ்மின் நடித்து இருக்கிறார்.
தமிழ் திரைப்பட உலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘தி டெஸ்ட்’ படத்தினை நேரடியாக நெட்பிளிக்ஸில் ஏப்ரல் 4ந் தேதி நேரடியாக வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சித்தார்த் கிரிக்கெட் வீரராக நடித்துள்ளார்.
மாதவன் கிரிக்கெட் பயிற்சியாளராக நடித்துள்ள நிலையில் இன்னொரு முக்கிய வேடத்தில் நயன்தாரா நடித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது இப்படத்தின் சித்தார்த்தின் அறிமுக வீடியோ வெளியாகி இருக்கிறது.
அதில் சித்தார்த், அர்ஜூன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. டெஸ்ட் கிரிக்கெட் வீரர் பார்ம் இழந்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப போராடும் வேடமாக இருக்கும் என தெரிகிறது. ஏற்கனவே சித்தார்த் நடிப்பில் கடந்தாண்டு சித்தா மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதை தொடர்ந்து சித்தார்த் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதால் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. மேலும், அடுத்தடுத்த மாதவன் மற்றும் நயன்தாராவின் அறிமுக வீடியோ வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.