Categories: latest news

சூர்யா வாடிவாசல்ல மீண்டும் இணைந்தது இப்படிதானா?.. ஒரே அன்பு மழையால இருக்கு!..

Actor Suriya: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 2 வருடங்களாக இந்த திரைப்படத்தில் கவனம் செலுத்தி நடித்து வந்தார் நடிகர் சூர்யா.

இந்த திரைப்படம் சூர்யாவின் கெரியரில் முக்கிய திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் பெரும் தோல்வியை சந்தித்தது. இதனால் சற்று மன வருத்தத்தில் இருந்து வருகின்றார் நடிகர் சூர்யா. இருப்பினும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகின்றார்.

தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் மே 1-ம் தேதி கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்கின்ற திரைப்படத்திலும் பிஸியாக நடித்து வருகின்றார்.

இந்த இரண்டு திரைப்படங்களை முடித்த கையோடு நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பதற்கு தயாராகி இருக்கின்றார். இந்த திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் அதன் பிறகு இந்த திரைப்படம் தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் இப்படம் டிராப் ஆகிவிட்டது என்று கூறி வந்தார்கள்.

மேலும் சூர்யா இந்த திரைப்படத்திலிருந்து விலகிவிட்டார் என்றும் தகவல் வெளியாகி இருந்த நிலையில் இந்த பொங்கல் பண்டிகைக்கு வாடிவாசல் திரைப்படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி தாணு, வெற்றிமாறன் மற்றும் சூர்யா உடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு வாடிவாசல் படத்தின் அப்டேட்டை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் நடிகர் சூர்யா மீண்டும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பதற்கான காரணம் வெளியாகி இருக்கின்றது. அதாவது நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து அகரம் பவுண்டேஷன் என்ற ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். இதன் மூலமாக பல குழந்தைகளுக்கும், ஏழை எளிய மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவி செய்திருக்கிறார்கள்.

சமீபத்தில் அவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்களின் வாழ்வாதாரம் என்ன, எப்படி முன்னேறி இருக்கிறார்கள் என்பது தொடர்பாக தெரிந்து கொள்வதற்கு அவரவர் இடங்களுக்கு சென்று பார்த்திருக்கிறார்கள். அகரம் பவுண்டேஷன் நிறுவனத்தை சேர்ந்த குழுவினர்கள் அப்போது அவர்கள் அனைவருமே சூர்யாவை வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க கூறுங்கள் என்று அன்பான வேண்டுகோள் வைத்தார்களாம்.

பெரும்பாலானவர்களை சந்தித்தபோது இதே விஷயத்தை திரும்பத் திரும்ப கூறி இருக்கிறார்கள். இதனால் ரசிகர்களின் அன்பான வேண்டுகோளுக்காக மீண்டும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பதற்கு முடிவு செய்தாராம் நடிகர் சூர்யா.

ramya suresh

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

9 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

10 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

10 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

12 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

18 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

19 hours ago