தற்போது வெற்றிமாறன் பல youtube சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார். அதில் தனுஷை பற்றி பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். ஒருவேளை அவரும் சிம்புவும் இணையும் திரைப்படத்தில் தனுஷ் என்ஓசி தருவதற்கு 20 கோடி கேட்டார் என்ற ஒரு தவறான தகவல் வெளிவந்து தனுஷின் பெயரை சமூக வலைதளங்களில் டேமேஜ் செய்து வருகிறார்கள் .அதனால் அதை எப்படியாவது ஸ்டாப் பண்ண வேண்டும் என்பதற்காக கூட இந்த மாதிரி தனுஷை பற்றி உண்மையில் என்ன நடந்தது என்பதற்காக கூட வெற்றிமாறன் பேட்டி கொடுத்து வருகிறாரோ என்னவோ தெரியவில்லை என பல பேர் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஏற்கனவே தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் சூதாடி படம் உருவாக இருந்தது. ஆனால் அந்தப் படம் எதிர்பாராத விதமாக டிராப் செய்யப்பட்டது. அதற்கான காரணம் என்ன என்பதை இப்போது கூறி இருக்கிறார் வெற்றிமாறன். தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லாதவன் ஆடுகளம் வடசென்னை அசுரன் போன்ற வெற்றி படங்கள் வெளியாகி உள்ளன. அதன் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து சூதாடி மற்றும் தேசிய நெடுஞ்சாலை என்ற இரண்டு படங்களை அறிவித்திருந்தார்கள்.
ஆனால் சில காரணங்களால் அந்த இரண்டு படங்களுமே கைவிடப்பட்டன. அப்போதைய காலகட்டத்தில் சூதாடி படம் கைவிடப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை பற்றி வெற்றிமாறன் கூறியிருந்தார். அதில் தனுஷ் ஒரு இந்தி படத்தில் உடனடியாக நடிக்க வேண்டி இருந்தது என்றும் அதற்காக நான்கு மாதங்கள் அவர் ஒதுக்க வேண்டி இருந்தது என்றும் கூறியிருந்தார். அந்த இடைவெளியில் தான் வெற்றிமாறன் வேறொரு படத்தை இயக்கத் தொடங்கினார் என்றும் செய்திகள் வெளிவந்தன .
ஆனால் இப்போது அவர் கூறும் போது விசாரணை படத்தை எடுக்க நினைக்கும் போது சூதாடி திரைப்படத்தை நிறுத்த வேண்டும் என வெற்றிமாறனுக்கு தோன்றியதாம். ஏற்கனவே சூதாடி படத்தில் ஐந்து நாட்கள் தனுஷ் நடித்து கொடுத்தாராம் .அதன் பிறகு தனுஷை அழைத்து வெற்றிமாறன் ‘இதை என்னால் தொடர இயலாது. நான் வேறு ஏதாவது செய்ய வேண்டும்’ என்று கூறினாராம் வெற்றிமாறன்.
dv
உடனே தனுஷ் ‘ஓகே சார் உங்களுக்கு உண்மையிலேயே இந்த படத்தை எடுக்க வேண்டும் என நினைத்தால் எடுங்கள்,’ என கூறினாராம். அதன் பிறகு ஒரு வாரம் கழித்து தனுஷை சந்தித்த வெற்றிமாறன் ‘இதுதான் ஐடியா. இதுதான் அந்த படத்தின் கதை. இதுதான் நான் உருவாக்க போகிறேன்’ என கூறுகிறார். உடனே தனுஷ் ‘கதை எல்லாம் என்னிடம் சொல்ல வேண்டாம். அந்தக் கதை எனக்கு பிடித்திருந்தால் அதில் நான் நடிக்கிறேன். எவ்வளவு பணம் வேண்டும் என்று மட்டும் சொல்லுங்கள் அந்த படத்தை எடுப்பதற்கு. நான் கொடுக்கிறேன் ’என கூறினாராம் தனுஷ். இந்த ஒரு நம்பிக்கை தான் விசாரணை என்ற படத்தை எடுக்க உதவியாக இருந்தது என வெற்றிமாறன் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். அதன் பிறகு விசாரணை திரைப்படத்தை வெற்றிமாறனும் தனுஷும் இணைந்து தான் தயாரித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
