Categories: Cinema News latest news

சூர்யாவை நேரடியாக தாக்கிய கௌதம்மேனன்.. உண்மையா நடந்தது என்ன?.. யாரு மேல தப்பு!..

Gautham Menon: தமிழ் சினிமாவில் கிளாசிக் இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் கௌதம் மேனன். இவர் இயக்கத்தில் வெளிவந்த பல திரைப்படங்கள் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. மின்னலே என்ற திரைப்படத்தில் தனது திரைப்படத்தை தொடங்கிய கௌதம் மேனன் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா என பல திரைப்படங்களை இயக்கி இருக்கின்றார்.

இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு தற்போது இயக்குனராக மட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் நடிகராகவும் நடித்து வருகின்றார். தற்போது மலையாளத்தில் நடிகர் மம்முட்டியை வைத்து டாமெனிக் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார். இப்படத்தின் மூலமாக மலையாள சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகின்றார்.

இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பதால் படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாக ஈடுபட்டு வருகின்றார் இயக்குனர் கௌதம். அந்த வகையில் சமீபத்திய பேட்டியில் பேசிய அவர் நடிகர் சூர்யா துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் நடிக்காதது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர்கள் இருவருக்குள் அப்படி என்னதான் பிரச்சனை யார் மேல் தவறு என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்நிலையில் வலைப்பேச்சில் இவர்கள் இருவருக்குள் இருக்கும் பிரச்சனை என்ன என்பதை கூறியிருக்கிறார்கள். அதில் அவர்கள் தெரிவித்திருந்ததாவது: ‘ இயக்குனர் கௌதம் மேனன் சமீபத்திய பேட்டிகளில் சூர்யா துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் முதலில் நடிக்க கமிட்டாகி அதன் பிறகு வேண்டாம் என்று மறுத்துவிட்டார். என் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை என்கின்ற மாதிரி பேசி இருந்தார்.

ஆனால் உண்மையில் அந்த சமயத்தில் என்ன நடந்தது என்றால் நடிகர் சூர்யா முதலில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். கௌதம் மேனன் ஸ்கிரிப்ட் தயாரித்துக் கொண்டு வருவார் என்று பல மாதங்கள் நடிகர் சூர்யா காத்திருந்தார். ஆனால் கௌதம் மேனன் நீண்ட நாட்கள் ஆகியும் கதையை தயார் செய்யாத காரணத்தால் நொந்து போய் இனிமேல் கௌதம் மேனன் படங்களில் நடிக்க மாட்டேன் என்று நேராக செய்தியாளர்களிடமே கூறிவிட்டார்.

மேலும் கௌதம் மேனன் இப்படத்தின் கதையை கூறியவுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் போட்டு இருக்கின்றார். அது என்னவென்றால் நீங்கள் இந்த திரைப்படத்தை தயாரிக்க வேண்டாம். வேறு ஒரு தயாரிப்பு நிறுவனம் தயாரித்தால் இப்படத்தில் நடிக்கின்றேன் என்று நடிகர் சூர்யா கூறி இருக்கின்றார் .சூர்யா தரப்பில் இருந்து விசாரிக்கும் போது இதைத்தான் கூறியிருக்கிறார்கள்.

முதலில் படத்தில் ஒப்புக்கொண்ட சூர்யா வேறு ஒரு தயாரிப்பில் படத்தை செய்யலாம் என்று கூறியிருக்கின்றார். நடிகர் சூர்யா அப்படி சொன்னது சரிதான். ஏனென்றால் சூர்யா இந்த திரைப்படத்திலிருந்து விலகிய பிறகு கௌதம் மேனன் விக்ரமை வைத்து தனது சொந்த தயாரிப்பில் இப்படத்தை தயாரித்து இயங்கினார். ஆனால் பல வருடங்களாக இப்படம் கிடப்பில் போடப்பட்டு இருக்கின்றது.

இதை முன்பே கவனித்த சூர்யா படத்தில் இருந்து தெளிவாக விளங்கிக் கொண்டா.ர் ஆனால் மொத்த பழியையும் தூக்கி கௌதம் மேனன் சூர்யா மேல் வைப்பது சற்றும் நியாயம் இல்லாத ஒன்று’ என்று அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

Published by
ramya suresh