ட்ரோல் பண்ணிட்டு போங்க!. இந்தியன் 2 படத்தில் நடிக்க இதுமட்டும்தான் காரணம்!.. புலம்பும் நடிகை...
இந்தியன்2 படத்தில் தன் கேரக்டருக்கு நிறைய விமர்சனம் எழுந்து இருக்கிறது. ஆனால் அந்த படத்தினை ஒப்புக்கொண்டதுக்கு பின்னால் நிறைய லாபம் இருந்ததாகவும் பிரபல நடிகை பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் இந்தியன்2. இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பு செய்திருந்தார். பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான அப்படம் மிகப்பெரிய மோசமான விமர்சனங்களை குவித்தது.
இருந்தும் இந்தியன்2 வசூல் ரீதியாக வெற்றி பெற்றதாகவே கூறப்படுகிறது. இப்படத்தில் பிரியா பவானி ஷங்கரின் கேரக்டர் பெரிய அளவில் ட்ரோல்களை சந்தித்தது. இதுகுறித்து பேட்டியில் பேசிய பிரியா பவானி சங்கர் கூறும்போது, இந்தியன் 2 படத்தை நான் ஒப்புக்கொண்டதால் எனக்கு இன்னும் நிறைய பெரிய வாய்ப்புகள் கிடைத்தது. நான் நடித்த மிகப்பெரிய திரைப்படம் என்றால் அது இந்தியன்2 தான்.
கடைக்குட்டி சிங்கம் நல்ல படம் என்றாலும் ஹீரோயின் நாம் இல்லையே என தோணவில்லை. கடந்த ஐந்து வருடத்தில் தமிழ் சினிமாவில் நல்ல கதைகளில் நடித்த ஹீரோயின்களை கை கொண்டு எண்ணிவிடலாம். யாரும் முதலிலேயே இந்த படம் சரியாக போகாது என்பதை முடிவு செய்து விடமாட்டார்கள். எல்லோரும் ஒரு படத்தை வெற்றி படமாக மாற்ற வேண்டும் என்று தான் உழைப்பார்கள்.
ஆனால் அது தவறும் போது எல்லோருக்குமே ஏமாற்றமாக தான் இருக்கும். அதுபோல்தான் இந்தியன் 2 திரைப்படம். இன்று எனக்கு நிறைய ட்ரோல்கள் ஆன்லைனில் இருக்கிறது. இருந்தும் இப்பொழுதும் எனக்கு இந்தியன் 2 திரைப்படம் நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வேன். ஏனெனில் கோலிவுட்டில் ஒரு நடிகைகள் கூட சங்கர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு நோ சொல்லவே மாட்டார்கள்.
அதனால் இந்தியன் படத்தை நான் ஒப்புக் கொள்வதற்கு தயங்கவே மாட்டேன். இருந்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போனது உண்மைதான். ஆனால் கமல் சாரால் மட்டுமே ஒரு படம் வெற்றியடையாது அதற்கு நிறைய காரணிகள் உள்ளது. அது ஒரு குழு வேலை. இந்த ஏமாற்றத்திலிருந்து முன்னேறி இன்னொரு நல்ல படைப்பை கொடுக்க வேண்டும் என்பதே தற்போதைய எண்ணமாக இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.