இவ்வளவு சீக்கிரம் இந்தியன் 2 ஓடிடிக்கு வந்ததுக்கு காரணம் இதுதானா?!.. ஆனா இந்த விஷயம் இடிக்குதே!..

by ராம் சுதன் |

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து ரிலீசான இந்தியன் 2 மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியானாலும் மோசமான விமர்சனங்களை பிடித்தது. இதனால் படக்குழு தற்போது முக்கிய முடிவு ஒன்றை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கமல்ஹாசன், சித்தார்த், நகுல் ப்ரீத் சிங், எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆனது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் படத்தில் இருந்தாலும் அதை படக்குழு சரியாக கையாளவில்லை. இதனால் படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய அடி வாங்கியது.

மோசமான விமர்சனங்களுக்கு குவிந்தது. இதனால் படத்தினை தியேட்டரில் பார்க்கும் ஆர்வம் ரசிகர்களிடம் இல்லாமல் போனதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவது படத்தில் இருந்து மேலும் வருமானத்தினை அதிகரிக்க உதவி செய்யும் என தயாரிப்பு நிர்வாகம் முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் கசிந்தது.

ஏற்கனவே இந்தியன் 2 திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 200 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறது. தற்போது இப்படத்தை ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியிட நெட்பிளிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும் இந்தியன் 2 ஓடிடி ரசிகர்களை கவருமா என கேள்விகள் எழுந்துள்ளது.

முதலில் இருந்த திட்டத்தினை காலி செய்துவிட்டு இந்தியன் 2 திரைப்படத்தை இந்த மாத முதல் வாரத்திலேயே ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டது. ஆனால் ஓடிடியில் வெளியிடுவதற்கு எட்டு வாரங்கள் காத்திருக்க வேண்டும் என்பது தியேட்டர் நிர்வாகிகளின் கண்டிஷன்களாக இருந்தது. இருந்தும் ஒரே மாதத்திற்குள் இந்தியன் 2 ஓடிடி எண்ட்ரி கொடுப்பது என்ன பிரச்னையை ஏற்படுத்தும் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 150 கோடி மட்டுமே வசூலித்திருந்தாலும், இப்படத்தின் உரிமையாளர்கள் ப்ரோமோஷனல் மட்டுமே இதில் மிகப்பெரிய தொகை லாபமாக எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. நெட்பிளிக்ஸிலும் இரண்டு பாகங்களையும் சேர்த்து 220 கோடிக்கு விற்பனை செய்திருந்தனர்.

இதைத்தொடர்ந்தே தியேட்டரில் ஈயாடும் இந்தியன் 2வை முடித்துக் கொள்வது லாபத்திலும் குறை இருக்காது என தயாரிப்பு நிறுவனம் கணக்குப் போட்டே ஓடிடி ரிலீஸை முந்தித் தள்ளி இருப்பதாக கூறப்படுகிறது. லைகா சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயண்ட் சார்பில் உதயநிதி ஸ்டாலின் இணைந்து இப்படத்தினை தயாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story