Vijay: நடிகர் விஜய் சில வருடங்களாக தனியாக வசித்து வருவதற்கு உண்மை காரணம் குறித்து வெளி வந்திருக்கும் தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். தொடர்ச்சியாக சினிமாக்களில் நடித்து வருகிறார். இந்த வருடத்தின் தொடக்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்னும் அவருடைய கட்சியை அறிவித்தார். இக்கட்சியின் முதல் மாநில மாநாடு சமீபத்தில் நடந்து முடிந்தது.
இது ஒரு புறம் இருக்க கட்சி கூட்டத்திற்கு ரசிகர்களை குடும்பத்துடன் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் விஜய் தரப்பிலிருந்து அவர் மனைவி மற்றும் பிள்ளைகள் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து தற்போது கேள்வி எழுந்துள்ளது.
விஜய் கடந்த நான்கு ஆண்டுகளாக நீலாங்கரை வீட்டில் தனியாக தான் வசித்து வருகிறார். அவர் மனைவி மற்றும் பிள்ளைகள் வெளிநாட்டில் அவருடைய வீட்டில் உள்ளனர். இப்படி அவர் தனியாக இருப்பதற்கு காரணம் கடலூரை சேர்ந்த ஒரு ஜோசியர்தானாம்.
பிரம்மச்சாரி வாழ்க்கை வாழ்ந்தால் அடுத்த ஐந்து அல்லது ஆறு வருடத்திற்குள் விஜய் முதல்வராக பதவியேற்பார் என அவர் சொன்ன ஆருடத்தின் பேரில்தான் தனியாக வசிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதனால் குடும்பத்தில் மனக்கசப்பு ஏற்பட்டது.
அரசியலுக்காக தங்களை கணவர் தூக்கி எறிந்து விட்டதாக அவர் மனைவி தரப்பு கடும் கோபத்தில் உள்ளனர். இதனால் தான் தற்போது விஜய் மனைவியை பொது நிகழ்ச்சியில் கூட அழைத்து வராமல் தனியாக வருவதை விரும்பி வருகிறார் எனவும் கூறப்படுகிறது. தற்போது திரைவிமர்சகர்கள் இது குறித்த விமர்சித்து வருவதையும் பார்க்க முடிகிறது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…