இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் ரிலீஸ் ஆக இருக்கின்றன என்பதை பற்றிய தகவல்தான் தற்போது வெளியாகி இருக்கின்றது. ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகின்றன. சில ஆண்டுகளாகவே ஓடிடி தளம் என்பது மக்களிடையே மிகவும் பிரபலம் வாய்ந்ததாக திகழ்கின்றது. திரையரங்கில் படத்தை பார்க்க தவறியவர்கள் ஓடிடியில் பார்த்து மகிழ்கின்றனர். அதுமட்டுமல்ல நேரடியாகவே சில படங்கள் ஓடிடியிலும் ரிலீஸ் ஆகின்றன.
முத்தையா இயக்கத்தில் அருள்நிதி நடித்த திரைப்படம் ராம்போ. இந்தப் படம் நாளை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக இருக்கின்றன. அருள்நிதிக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். குத்துச்சண்டையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் இந்த படம் நேரடியாக நாளை ரிலீசாகின்றன.
பவன் இயக்கத்தில் கண்ணா ரவி நடித்த ஒரு வெப் தொடர் வேடுவன். இதில் சஞ்சீவ், ஐஸ்வர்யா ரகுபதி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் நாளை நேரடியாக ஜி5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக இருக்கின்றன. படத்தின் ப்ரோமோஷன் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் பாம். இந்த படத்தை விஷால் வெங்கட் இயக்கியிருந்தார். இதில் ஸ்வாத்மிகா ராஜசேகர் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படமும் நாளை ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆக இருக்கின்றன. இந்த படத்தில் காளி வெங்கட் ,அபிராமி, நாசர், சிங்கம்புலி என பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.
அடுத்ததாக பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் உருட்டு உருட்டு. காமெடி கதைகளத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் நாகேஷின் பேரன் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் சிம்பிலி சவுத் ஓடிடி தளத்தில் நாளை ரிலீஸ் ஆக இருக்கின்றது.
மோகன் ஸ்ரீவர்ஷா இயக்கத்தில் உருவான திரைப்படம் திரிபநாதரி பார்பரிக். த்ரில்லர் கதையில் உருவான இந்த படத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். இந்தப் படமும் நாளை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாக இருக்கின்றன.
கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடித்த திரைப்படம் தான் மிராய். இதில் மனோஜ் மஞ்சு வில்லனாக நடித்திருக்கிறார். ஒரு வித்தியாசமான கதைகளத்தில் உருவான இந்த படம் நாளை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கின்றது.
பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் வார்2. யாஷ் ராஜ் நிறுவனத்தின் கீழ் ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் உருவான இந்த படத்தை அயன் முகர்ஜி இயக்கி இருந்தார். இதில் கிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர், கியாரா அத்வானி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி இருக்கின்றன.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…