வனிதாகிட்ட ஒன்னு தான் சொன்னேன்! பச்சை பச்சையா பேசிட்டாங்க.. தியாகராஜனுக்கே இந்த நிலைமையா?
தமிழ் சினிமாவில் வனிதா விஜயகுமார் ஒரு முக்கிய நடிகையாக பார்க்கப்படுகிறார். சந்திரலேகா என்ற படத்தின் மூலம் முதன் முதலில் தன் சினிமா அறிமுகத்தை விஜயுடன் ஜோடியாக ஆரம்பித்தார். முதல் படம் அவருக்கு திருப்திகரமாக அமைந்தது. அதனை அடுத்து மாணிக்கம் என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்தார்.
ஆனால் அதன் பிறகு சொல்லிக் கொள்ளும் படி எந்தப் படத்திலும் பெரிதாக பேசப்படவில்லை. கல்யாணம், குடும்பம், குழந்தைகள் என வாழ்க்கையை வாழத் தொடங்கினார். ஆனால் அங்குதான் அவருக்கு பிரச்சினையே ஆரம்பமானது. திருமண வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சினைகள் எழுந்தன.
அதனாலேயே சினிமாவில் அவரால் ஜொலிக்க முடியவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார் வனிதார். அதனை அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
அதுமட்டுமில்லாமல் கலக்கப் போவது யாரு சாம்பியன் நிகழ்ச்சியிலும் நடுவராக கலந்து கொண்டார். இப்படி பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு மக்களை எண்டெர்டெய்ன்மெண்ட் செய்தார். இன்னொரு பக்கம் எதையும் வெளிப்படையாக பேசுபவர். வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாகவும் பேசக் கூடியவர்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல படங்களில் இப்போது வனிதாவை பார்க்கமுடிகிறது. தற்போது கூட பிரசாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் அந்தகன் திரைப்படத்திலும் வனிதா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அப்போது பிரசாந்த், சிம்ரன், ப்ரியா ஆனந்த், வனிதா விஜயகுமார், தியாகராஜன் உட்பட பலரும் கலந்து கொண்டனர். அப்போது தியாகராஜன் பல விஷயங்களை கூறினார்.
அதாவது சிம்ரன் அற்புதமாக நடித்தார். வனிதாவும் சிறப்பாக நடித்திருந்தார். அவரை ஒரு எமோஷன் சீனில் நடிக்கும் போது உனக்கு தெரிந்த கெட்ட வார்த்தையை பேசு என்று சொல்லிவிட்டேன். அவர் பச்சை பச்சையாக பேசிவிட்டார். யார் மேல் என்ன கோபம் என்றே தெரியவில்லை. ஆனால் அந்தகன் படத்தை பொறுத்தவரைக்கும் வனிதாவுக்கு இது ஒரு திருப்பு முனையான படமாக இருக்கும் என தியாகராஜன் கூறினார்.