Thug life: கமலும், மணிரத்னமும் இணைந்து உருவாகியுள்ள திரைப்படதான் தக் லைப். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸும், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். நாயகன் படத்திற்கு பின் 37 வருடங்கள் கழித்து கமலும், மணிரத்னமும் இணைந்ததால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்பு ஏற்பட்டது.
மணிரத்னம் படங்களுக்கென்றே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். அதேபோல், கமலுக்கும் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதுபோக இந்த படத்தில் சிம்பு, திரிஷா போன்றவர்களும் நடித்திருப்பதால் ரசிகர்களுக்கு படம் பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டது. அதோடு, இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்களும் ரசிகர்களிடம் ஹிட் அடித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
குறிப்பாக ஸ்ருதி ஹாசன் பாடிய விண்வெளி நாயகா, இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்தமழை பாடல் ஆகியவை ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைத்தது. ஆனால், இந்த பாடல்கள் எதுவுமே படத்தில் இல்லை என்பது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக முடிந்தது.
அதோடு, படத்தின் கதை, திரைக்கதையிலும் சுவாரஸ்யம் இல்லாமல் ரசிகர்களை ஏமாற்றிவிட்டது. படம் நன்றாக இல்லை. எதிர்பார்த்தது போல் இல்லை. கமலும், சிம்புவும் இருந்தும் கூட கதையோடு ஒன்ற முடியவில்லை என படம் பார்த்தவர்கள் சொல்கிறார்கள். அதோடு, படம் வெளியாகி 3 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில் தக் லைப் இந்தியாவில் 30 கோடியை மட்டுமே வசூல் செய்திருக்கிறது. வெளிநாடுகளின் வசூலையும் சேர்த்தால் 60 கோடி இருக்கும் என்கிறார்கள். எனவே, படம் கண்டிப்பாக நஷ்டம்தான் என பலரும் சொல்கிறார்கள்.
ஆனால், தக் லைப் படம் கமலுக்கு நஷ்டமில்லை. லாபம் மட்டுமே என்பது தெரியவந்திருக்கிறது. இந்த படத்தை 150 கோடி ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் ராஜ்கமல் நிறுவனத்திற்கு மணிரத்னம் செய்து கொடுத்திருக்கிறார். அதாவது 150 கோடி பட்ஜெட்டில் அவர் படம் எடுத்து கொடுத்துவிட்டார்.
படத்தின் வெளியீட்டு உரிமை, இசை உரிமை, மற்ற மொழி டப்பிங் உரிமை, வெளிநாட்டு உரிமை, டிவி மற்றும் ஓடிடி உரிமை எல்லாம் சேர்த்து படம் வெளியாவதற்கு முன்பே 230 கோடி வந்துவிட்டதாம். இதிலேயே கமலுக்கு 80 கோடி டேபிள் பிராஃபிட் என்கிறர்கள். இது போக தியேட்டரிலிருந்து வரும் வசூல் தனி. எல்லாம் சேர்த்தால் கமலுக்கு 120 கோடிக்கும் மேல் லாபம் எனவும், அதை கமலும், மணிரத்னமும் பிரித்துக்கொள்வார்கள் எனவும் சொல்கிறார்கள்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…