Categories: latest news

50 செகண்ட் வீடியோ.. தக் லைஃப் படத்தை மொத்தமா சோலிய முடிச்சுட்டாங்க..

37 ஆண்டுகளுக்குப் பிறகு இருபெரும் லெஜெண்டுகளான கமலும் மணிரத்னமும் இணையும் திரைப்படம் தக் லைஃப். அந்த படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. ஒரு பேன் இந்தியா திரைப்படமாக வெளியாகி இருக்கிறது. படத்தைப் பற்றி கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதில் கமல் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

எப்போதும் போல தன்னுடைய அபாரமான நடிப்பை இந்த படத்தில் வழங்கி இருக்கிறார் கமல். அவருடன் இணைந்து சிம்பு திரிஷா நாசர் அசோக் செல்வன் அபிராமி ஜோஜூ ஜார்ஜ் ஐஸ்வர்யா லட்சுமி என பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் இருக்கின்றனர். அதனால் இந்த படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. மணிரத்னம் கமல் என்றாலே நாயகன் திரைப்படம் தான் நம் நினைவுக்கு வரும் .

1987 ஆம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படம் ஒரு கல்ட் கிளாசிக் திரைப்படமாக அமைந்து விட்டது. அந்த படத்திற்கு இப்போது வரை ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அப்படி இருக்கும் பட்சத்தில் தான் மீண்டும் மணிரத்னம் கமல் கூட்டணி என்னும் பொழுது பெரிய அளவு எதிர்பார்ப்பு இருந்தது. படத்தை பற்றி பெரிய அளவில் ப்ரோமோட் செய்து வந்தார்கள் படக்குழு.

ஊர் ஊராக மாநிலம் விட்டு மாநிலம் சென்று படத்தை பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்து வந்தார்கள். இன்று படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. மணிரத்தினம் அவருடைய இடத்திலிருந்து கொஞ்சம் விலகி இருப்பதாகவே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மணிரத்னம் கமல் எனும் பொழுது நாயகன் திரைப்படத்தை மனதில் வைத்தே தான் அனைவரும் படத்தை பார்க்க சென்றனர்.

ஆனால் எதிர்பார்த்தது வேறு நடந்தது வேறு என்பதை போல படம் தங்களை ஏமாற்றி விட்டதாக பெருவாரியான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு இடையில் இது சம்பந்தமான மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 50 வினாடிகளில் தக் லைப் திரைப்படத்தை மொத்தமாக முடித்துவிட்ட ஒரு வீடியோவை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர் .

கஜினி படத்தில் நடிகர் சத்யனை சஞ்சய் ராமசாமி என சூர்யாவிடம் அசின் அறிமுகம் செய்ய அதை பார்த்ததும் சூர்யா சிரித்த விட அசின் அதில் கொஞ்சம் கடுப்பாகி விடுவார். கடுப்பையும் தாண்டி கோபத்தில் கத்துவார். அதைப்போல மக்கள் தக் லைஃப் படத்தை எதிர்பார்த்து போனது வேறு. ஆனால் படத்தில் இருந்தது வேறு என்பதை சுட்டிக்காட்டும் விதமாகவே இந்த ஒரு வீடியோ வைரலாகி வருகின்றன.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

5 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

7 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

8 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

10 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

13 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

1 day ago