Thuglife: இந்தியன் 2-வில் விழுந்த மரண அடி... எழுந்துருவாரா ஆண்டவரு!.. பர்த்டேக்கு வரும் சூப்பர் அப்டேட்..!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:28:49  )

அரசியலில் கவனம் செலுத்துவதற்காக சில வருடங்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த கமலஹாசன் விக்ரம் திரைப்படத்தின் மூலமாக மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆரம்பமே சும்மா அதிருதில்ல என்ற வசனம் போல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படம் உலக நாயகன் கமலஹாசனுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்தது.

இப்படத்தின் வெற்றி மீண்டும் கமலஹாசனை சினிமாவிற்குள் இழுத்து வந்துவிட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். அந்த வகையில் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடித்து வரும் திரைப்படம் தான் தக் லைஃப். கமலஹாசன் மற்றும் மணிரத்தினம் பல வருடங்கள் கழித்து இந்த திரைப்படத்தில் இணைந்திருப்பது ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

மேலும் கமலுடன் இணைந்து சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். இந்த திரைப்படத்தை கமலஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தான் தயாரித்து வருகின்றது. இந்த திரைப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கின்றது. அதற்குக் காரணம் விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு கமலஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் தான்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் சங்கர் இயக்கியிருந்தார். மிகப்பெரிய பொருள் செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. மேலும் இந்த திரைப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரம் பட்டாளங்கள் நடித்திருந்தார்கள். இருப்பினும் மிக மோசமான விமர்சனங்களை பெற்று தோல்வியை சந்தித்தது. கமல் நடித்த படங்களிலேயே அதிக ட்ரோல்களுக்கு உள்ளானது இந்தியன் 2 திரைப்படம் தான்.

இந்தியன் தாத்தாவை சமூக வலைதள பக்கங்களில் வைத்து நெட்டிசன்கள் ட்ரோல்கள், மீம்ஸ்கள் என வைத்து செய்துவிட்டனர். இதனால் கமலஹாசன் மணிரத்தினம் இணையும் தக் லைஃப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கின்றது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே இவர்கள் இருவரது கூட்டணியில் உருவான படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் நிலையில் இந்த திரைப்படமும் நடிகர் கமலஹாசனுக்கு ஒரு சிறந்த படமாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்தியன் 2 க்கு விழுந்த மரண அடியிலிருந்து மீள்வதற்கு இப்படம் உதவியாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள். அது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்நிலையில் வரும் ஏழாம் தேதி கமலஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு தக் லைஃப் படத்திலிருந்து புதிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.

தக் லைஃப் திரைப்படத்திலிருந்து அனேகமாக படத்தின் டிரைலர் அல்லது கமலஹாசன் தொடர்பான வீடியோ கிளிபிங்ஸ் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த செய்தி கமலஹாசன் மற்றும் சிம்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story