தக் லைஃப் பொங்கலுக்கு வருமா, வராதா? பிரபலம் சொல்லும் புதுத்தகவல்

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:35:55  )

கமல் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்துக் கற்றுக் கொள்வதற்காக சென்றுள்ளார். அந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் தான் அவருடைய லட்சியப்படமான மருதநாயகத்தையும் மீண்டும் எடுக்கப் போகிறார் என்றெல்லாம் இணையதளத்தில் செய்திகள் வந்தன.

படத்தில் அவருக்கு உரிய இளமையான காட்சிகளை ஏஐயில் எடுத்து விடுவார்கள் என்றும் சொல்லப்பட்டது. அதே போல அந்தத் தொழில்நுட்பத்தை அரசியலிலும் பயன்படுத்தப் போகிறார் என்றார்கள்.

இன்னும் ஒரு சிலர் கமல் பொலிடிகல் சயின்ஸ் படிக்கத் தான் சென்றுள்ளார். அப்படியே ஏஐ பற்றியும் படிக்க உள்ளார் என்றார்கள். எது உண்மை என்ற விவரம் அவரே திரும்ப வந்து சொன்னால் தான் தெரியும். இதற்கிடையே பிரபல பத்திரிகையாளர் தேவமணி கமலின் தக்லைஃப் படம் குறித்து ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார்.

அதன்படி அந்தப் படம் வரும் பொங்கலுக்கு வருகிறதா இல்லையா என்றும் அவருக்கு வந்த தகவல்களின் அடிப்படையில் அவரது யூடியூப் சானல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

மணிரத்னம், கமல் காம்போவில் தற்போது உருவாகி வரும் படம் தக் லைஃப். இது பொங்கலுக்கு வருமா என்று கேட்கிறார்கள். இந்தப் படத்துக்கு நிறைய வேலைகள் இருக்கிறதாம்.

தக் லைஃப் படத்துக்கு இன்னும் 6 நாள் சூட்டிங் பாக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுக்காகத் தான் கமல் அமெரிக்காவிற்குச் சென்று தன்னைத் தயார் பண்ணிக்கிட்டு இருக்காராம். 90 நாள் கோர்ஸ் முடிஞ்சி அவர் வந்ததும் அந்த 6 நாள் சூட்டிங்கை எடுததுருவாங்களாம்.

அதுக்கு அப்புறம் மற்ற விஷயங்களை எல்லாம் தயார்படுத்திடுவாங்களாம். அதுக்கு முன்னால சிஜி ஒர்க், விஎப்எக்ஸ்னு மற்ற வேலைகளைப் பார்த்து ரெடியா வச்சிருப்பாங்களாம். 6 நாள் சூட்டிங் முடிஞ்சி அந்தக் காட்சியைப் பார்த்ததும் டைரக்டர் மணிரத்னம் ஓகே சொல்லிட்டாருன்னா பொங்கலுக்கு வரலாமாம். இல்லேன்னா தள்ளிப்போகலாமாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

எப்படியும் இந்தக் காம்போவில் மீண்டும் நாயகன் போல வெற்றி உறுதி என இப்போதே ரசிகர்கள் பேச ஆரம்பித்து விட்டனர்.

Next Story