Categories: latest news

எல்லாம் இந்தியன் 2 செய்த வேலை… தக் லைஃப் பிசினஸ் இப்படி ஆகிடுச்சே?

கமல், சிம்பு இணைந்து நடித்துள்ள படம் தக் லைஃப். 38 ஆண்டுகளுக்குப் பிறகு கமல், மணிரத்னம் இணைந்துள்ள இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. ஏஆர்.ரகுமான் இசையில் 8 பாடல்களும் மாஸ் ரகங்கள். ஜிங்குச்சா பாடலை கமல் எழுதியுள்ளார். விண்வெளி நாயகா பாடலை கமல் மகள் சுருதிஹாசன் பாடியுள்ளார். இரண்டுமே பட்டையைக் கிளப்புகிறது.இப்போது படத்திற்கான புரொமோஷன் படுஜோராக நடந்து வருகிறது.

அந்த வகையில் படத்தின் பிசினஸ் குறித்தும் ஏற்கனவே படத்திற்கான ஆடியோ லாஞ்சில் ஓபனாக கமல் பேசி இருந்தார். இதுகுறித்து பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். என்னன்னு பாருங்க.

கமல் ஏன் முழுநேர அரசியல்வாதியா பிரகாசிக்க முடியவில்லை என்றால் அது விக்ரம் தந்த வெற்றி தான். ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போறேன்னு சொன்னதால தான் அவசரம் அவசரமா மக்கள் நீதி மய்யம்னு கட்சியை ஆரம்பிச்சாரு.

ரஜினி அரசியலுக்கு வரலன்னதும் இவரும் அப்படியே விலகிட்டாரு. கமல் தக் லைஃப் படத்துக்கு மேடையிலயே பிசினஸ் பத்தி பேசிருக்காரு. இந்தப் படத்து சேட்டிலைட், ஓடிடி தவிர வேற எதுவும் கிடையாது. நானும், மணிரத்னமும் தான் சொந்தமா ரிலீஸ் பண்றோம். விநியோகஸ்த வேலைகளையும் நாங்களே எடுத்துக்குறோம். ரசிகர்கள் நீங்க பார்த்துக்கோங்கன்னு கமல் படத்திற்கான ஆடியோ லாஞ்ச்ல பேசினாரு.

விசாரிச்சிப் பார்த்த போது ஒரு படத்தோட வியாபாரம் அதன் முந்தைய படத்தை வைத்துத்தான் நடக்கும்னு தெரியுது. விக்ரம் தந்த வெற்றி ஓகே. ஆனா இந்தியன் 2 வை வச்சித்தான் வியாபாரம். அப்படிப் பார்க்கும்போது தக் லைஃப் பெரிய இறுக்கமான சூழலில்தான் இருக்கு. ஜூன் 5, பர்ஸ்ட் டே, பர்ஸ்ட் ஷோவுல தான் அது எல்லாம் தெரிய வரும். கமல், ரஜினிக்கு இடையே நட்பைத் தாண்டி போட்டி என்பது இன்னும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

9 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

9 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

16 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

17 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

18 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago