Categories: latest news

இன்றுடன் மன்னிப்பு கேட்கலைனா சோலி முடிஞ்சிச்சு… கமலை மிரட்டிப்பார்க்கும் கன்னட திரையுலகம்…

Thuglife: மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தக் லைப்’ படத்தில் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

கமல்ஹாசன் சமீபத்தில் தந்த ஒரு பேட்டியில் கன்னடம் தமிழ் மொழியிலிருந்து பிறந்தது எனப் பேசி இருப்பார். இந்தக் கருத்து கர்நாடக மக்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. பல சங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கமலின் போஸ்டர்களை கிழித்தனர்.

மேலும், இதற்கெதிராக கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கம் மிகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கமல்ஹாசன் மே 30-க்குள் மன்னிப்பு கோரவில்லை என்றால், அவரது ‘தக் லைப்’ திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதி அளிக்கமாட்டோம் என உத்தரவிட்டுள்ளது.

கன்னட மொழியின் மரபையும், மக்களின் உணர்வுகளையும் இழிவாகச் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று சங்கம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.

ஒருபுறம், கமல்ஹாசனுக்கு கன்னட நடிகர் சிவராஜ்குமாரே ஆதரவு தெரிவித்து இருக்கிறார். இதற்கிடையில் கமலிடம் மன்னிப்பு கேட்பீர்களா எனக் கேள்வி எழுப்பப்பட்ட போது, ஜனநாயக நாடு இது. எனக்கு சட்டம் மற்றும் நீதி மீது நம்பிக்கை இருக்கிறது.

கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா மக்கள் மீது எனக்கு அன்பு இருக்கிறது. அதை யாரும் சந்தேகிக்க முடியாது. இதற்கு முன்பும் எனக்கு மிரட்டல்கள் வந்துள்ளன. நான் தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்டுவிடுவேன்; தவறு செய்யவில்லை என்றால் மன்னிப்பு கேட்கமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் தற்போது அப்பகுதிகளில் தக் லைப் வெளியாகுமா என சந்தேகம் எழுந்துள்ளது. டீசர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கமல்ஹாசனுடன் த்ரிஷா, சிம்பு, அசோகன் செல்வன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த சர்ச்சை தொடரும் பட்சத்தில், தமிழகம் மற்றும் கர்நாடக திரையரங்குகளில் இப்பட வெளியீடு பெரும் தாக்கத்தை சந்திக்கலாம். இந்த பிரச்னையால் வசூல் ஏறுமா அடிவாங்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

2 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

14 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

15 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

15 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

17 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

23 hours ago