கமல் கன்னட மொழி குறித்துப் பேசி சர்ச்சையில் சிக்கி தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியாகாமல் போனது. மன்னிப்பு கேட்டால் தான் படம் வெளியாகும் என்ற கர்நாடக அரசின் பிடியில் சிக்காமல் கமல் லாவகமாக அதே பந்தை திருப்பி சிக்சர் அடித்துள்ளார். வாங்க என்ன விவரம்னு பார்ப்போம்.
தக் லைஃப் படத்தைப் பாதுகாப்போடு வெளியிட கர்நாடக அரசு உறுதி அளித்துள்ளது. இந்தப் படத்தை உச்சநீதிமன்றம் ரிலீஸ் பண்ணலாம்னு சொல்லிட்டது. இப்போ படம் வெளியாகி இவ்ளோ நாள் கழித்து கர்நாடகாவில் ரிலீஸ் பண்ணினா ஓடுமா என்ற கேள்வி எழுகிறது. மாநிலத்துக்கு மாநிலம் ரசனை மாறுபடுகிறது.
கர்நாடகா, கேரளா, ஆந்திராவுல ஓடுன படங்கள் தமிழ்நாட்டுல ஓடுனது இல்லை. இங்கே தோல்வி அடைந்த படங்கள் மொழிமாற்றம் செய்யப்ப்டு அங்கே நல்லா ஓடிருக்கு. தக் லைஃப் படம் கர்நாடகாவில் உள்ளவர்களுக்குப் பிடித்து அங்கே ஒருவேளை ஓடறதுக்கு வாய்ப்புகள் இருக்கு. அதனால கணிக்க முடியாது.
ஒரு படத்தை ரிலீஸ் பண்ணியே ஆகணும்னு கமல் முடிவு எடுத்துட்டாரு. மன்னிப்பு கேட்டா தான் ரிலீஸ் பண்ண விடுவோம்னு கர்நாடகாவில சொல்லிட்டாங்க. ஆனா இவரு மன்னிப்பு கேட்கவே மாட்டேன்கற விஷயத்துல உறுதியா இருந்தாரு. அந்த உறுதியோடு உறுதியா இருந்து அந்தப் படத்தை அங்கே ரிலீஸ் பண்ணிருக்காருன்னா கமல்தான் ஜெயிச்சிருக்காரு.
படம் ஜெயிக்குது தோற்குது அது ரெண்டாவது விஷயம். கமல் ஜெயிச்சிட்டாருல்ல. நான் மன்னிப்பு கேட்டுத்தான் உங்க ஊருக்குப் படம் வரணும்னா மன்னிப்பு கேட்காமலேயே வர வைப்பேன்கற கட்ஸ் அவருக்கிட்ட இருக்கு. அவரு நினைச்சிருந்தா கர்நாடக உயர்நீதிமன்றம் நீங்க மன்னிப்பு கேட்டுட்டு படத்தை ரிலீஸ் பண்ணுங்கன்னு சொல்றாங்க. 10 நாள்ல பதில் சொல்றோம்னுட்டு வந்துட்டாங்க.
அதனால அவங்க ரிலீஸ் பண்ணலன்னு வந்துருக்கலாம். ஆனாலும் உச்சநீதி மன்றத்துக்குப் போறாரு. என்னோட உரிமை இது. ஒரு மாநிலத்தில் படத்தை திரையிடுவதற்கான உரிமை எனக்கு இருக்கு. சென்சார் செய்யப்பட்ட ஒரு படத்தை தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்கிறதுதான் அவரோட வாதம். அதை வந்து உச்சநீதிமன்றம் ரொம்ப தெளிவா புரிஞ்சிக்கிட்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தை கண்டித்துள்ளது.
தொடர்ந்து அரசாங்கமே போராட்டக்காரர்களிடம் படத்தை ரிலீஸ் பண்ணும்போது கொஞ்சம் அமைதியா இருங்கன்னு கேட்க வேண்டிய சூழலை கமல் ஏற்படுத்தியுள்ளார். எப்பவுமே கமலைப் பொருத்தவரை சட்டரீதியாக பிரச்சனையை அணுகிவிடணும்னு நினைப்பார். அதையேத் தான் செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேற்கண்ட தகவலை பிரபல வலைப்பேச்சு அந்தனன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…
நடிகர் விஜயகாந்துக்கும்…
ரசிகர்களால் சூப்பர்ஸ்டார்…
கோலிவுட்டில் உள்ள…