தன்னுடைய பாலிசியையே மாத்திக்கிட்டாரே! ‘தக் லைஃப்’ படத்துக்காக மெனக்கிடும் மணிரத்னம்
மணிரத்தினம் இயக்கத்தில் கமல், சிம்பு ஆகியோர் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் தக் லைஃப். இந்த படத்தில் இவர்களுடன் இணைந்து திரிஷாவும் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்களுடன் படத்தின் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு அதன் பிறகு ஒவ்வொருத்தராக விலகி அதிர்ச்சி செய்தியாய் போனது.
ஜெயம் ரவி துல்கர் சல்மான் என பல முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் நடிப்பதாக இருந்தார்கள். ஆனால் ஒன்றன்பின் ஒன்றாக அனைவரும் இந்த படத்தில் இருந்து விலக ஆரம்பித்தனர். அதற்கான காரணங்கள் என்ன என்பது பெரும் சர்ச்சையாக வெளியாகியது.
இந்த நிலையில் சிம்பு திடீரென இந்த ப்ராஜெக்ட்டுக்குள் உள்ளெ வந்தார். இப்போது தக்கலைப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகின்றது இதற்கிடையில் மணிரத்தினத்தை பொறுத்த வரைக்கும் ஒரு படத்தை கையில் எடுத்தால் 50 , 60 நாட்களில் எடுத்து முடித்து விடுவார்.
ஆனால் தக் லைஃப் படத்தை பொறுத்தவரைக்கும் கிட்டத்தட்ட 100 நாட்களைத் தாண்டி படப்பிடிப்பு நடக்கும் என்று சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் ஆரம்பத்தில் இருந்த துல்கர் சல்மான் ஜெயம் ரவி இவர்களை பொறுத்து ஸ்கிரிப்ட் இருந்ததாகவும் இப்போது அவர்கள் இல்லை எனும் போது ஸ்கிப்டில் சில மாற்றங்கள் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதனாலயே இவ்ளோ நாள்கள் ஆகும் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் இப்போது வரைக்கும் கமல் சிம்பு இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டு வருகின்றதாம் .
அது மட்டும் அல்லாமல் படத்தில் அதிகமாக இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் தான் இடம்பெறும் என்றும் சொல்லப்படுகிறது. கமல் இல்லாத போது சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகளும் சிம்பு இல்லாத போது கமல் சம்பந்தப்பட்ட காட்சிகளும் மட்டுமே எடுக்கப்பட்டு வருகின்றதாம்.