100 வருஷம் ஆனாலும் ஒரே பராசக்தி!.. தொடரும் எதிர்ப்பு.. இதுக்கு ஒரு எண்டே இல்லையா?..

Actor Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் அமரன் திரைப்படத்திற்கு பிறகு டாப் நடிகர்களில் ஒருவராக மாறி இருக்கின்றார் நடிகர் சிவகார்த்திகேயன். அதற்கு முன்பு வரை வளர்ந்து வரும் நடிகராக இருந்து வந்த சிவகார்த்திகேயனுக்கு அமரன் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் கடந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு வெளியான திரைப்படம் அமரன். உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. பாக்ஸ் ஆபிஸில் 350 கோடிக்கு மேல் வசூல் செய்த சாதனை படைத்தது.
இந்த திரைப்படம் சிவகார்த்திகேயனின் கெரியரில் மிக முக்கிய படமாக அமைந்திருக்கின்றது. இதை தொடர்ந்து பெரிய பெரிய திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு சிவகார்த்திகேயனுக்கு அமைந்திருக்கின்றது.
சிவகார்த்திகேயன் லைன்அப்: அமரன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் கமிட்டான திரைப்படம் எஸ்கே 23. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்னும் 40 நாட்கள் ஷூட்டிங் பாக்கி இருப்பதாக கூறப்படுகின்றது. இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்கின்ற திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகின்றார்
பராசக்தி திரைப்படம்: இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25 வது படமாக உருவாகி வரும் திரைப்படம் பராசக்தி. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார்.
மேலும் தவான் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகின்றது. முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை பச்சையப்பாஸ் கல்லூரியில் எடுக்கப்பட்டு வந்த நிலையில் அதனைத் தொடர்ந்து சிதம்பரனார் பல்கலைக்கழகத்தில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு ஸ்ரீலங்காவில் நடக்க இருப்பதாக கூறப்படுகின்றது.
டைட்டில் பிரச்சனை: இந்த திரைப்படத்திற்கு பராசக்தி என்கின்ற டைட்டில் வைத்ததில் இருந்து ஏராளமான பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கின்றது. ஏனென்றால் இது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த படத்தின் டைட்டில் ஆகும். இந்த டைட்டிலை எந்த படத்திற்கும் வைக்ககூடாது என்று கூறி தொடர்ந்து பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கின்றது.
இப்படத்தின் டைட்டில் உரிமையை ஏவிஎம் நிறுவனம் வைத்திருக்கும் நிலையில் அவர்களிடம் முறையாக என்ஒசி வாங்கி சிவகார்த்திகேயன் படத்துக்கு இந்த டைட்டிலை வைத்து இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ரசிகர்கள் பராசக்தி படத்தின் டைட்டிலை சிவகார்த்திகேயனின் படத்திற்கு வைக்கக் கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் தற்போது போஸ்டர் ஒன்றை அடித்தும் ஒட்டி வருகிறார்கள். 100 ஆண்டுகள் ஆனாலும் ஒரே பராசக்தி தான், அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி தான் என்று தொடர்ந்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். இதனால் படம் வெளியீட்டு சமயத்தில் பிரச்சனை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.