செம ரொமான்ஸாக இருக்கே... வெளியானது அர்ஜுன் தாஸ்-அதிதி சங்கர் படத்தின் டைட்டில் டீசர்...!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:40:35  )

அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் பெயரானது தற்போது வெளியாகி இருக்கின்றது. இந்த திரைப்படத்திற்கு ஒன்ஸ்மோர் என்று பெயரிடப்பட்டிருக்கின்றது. அர்ஜுன் தாசின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் டைட்டில் மற்றும் டைட்டிலுக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்திற்கு குஷி, ஹாய் நன்னா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து ஃபேன் இந்தியா அளவில் பிரபலமான இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க இருக்கின்றார். இவர் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும். அதிலும் பல பாடல்கள் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகின்றது.

இவர் இதுவரை மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்கு இசையமைத்து இருக்கின்றார். இவர் ஒன்ஸ்மோர் படத்தின் மூலமாக தான் முதன்முறையாக தமிழுக்கு இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கின்றார். இந்த திரைப்படத்தை அறிமுகம் இயக்குனரான விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்க இருக்கின்றார். அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் இந்த திரைப்படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள்.

மேலும் அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்கின்றார். இந்த திரைப்படத்தின் டைட்டில் புகைப்படமானது முதலில் வெளியானது. இந்த புகைப்படத்தில் அதிதி சங்கரும் அர்ஜுன் தாசும் ரொமான்டிக் லுக்கில் இருந்தார்கள். இதைத் தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்தை தயாரிக்கும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக டைட்டில் டீசர் வெளியாகி இருக்கின்றது. இந்த டீசர் பார்வையாளர்களை பெருமளவு கவர்ந்திருக்கின்றது.

மேலும் இந்த திரைப்படத்திற்கு ஒன்ஸ்மோர் என்று பெயரிடப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள். ஏனென்றால் இந்த பெயரில் ஏற்கனவே விஜய் சிம்ரன் நடிப்பில் திரைப்படம் வெளியாகி இருக்கின்றது. மேலும், பெரும்பாலான திரைப்படங்களில் அர்ஜுன் தாஸ் அவர்களை நாம் வில்லன் கதாபாத்திரத்தில் தான் பார்த்திருப்போம்.

முதன் முறையாக ஒரு ரொமான்டிக் ஹீரோவாக பார்க்க இருப்பதால் ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைப்பில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கரின் ரொமாண்டிக்-கை பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story