Vettaiyan: அடிப்படையில் பத்திரிக்கையாளராக பணிபுரிந்தவர் ஜெய்பீம் பட இயக்குனர் தா.ச.ஞானவேல். சினிமாவில் நுழைந்து இயக்கம் கற்று ‘கூட்டத்தில் ஒருவன்’ என்கிற படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்திருந்தார். அதன்பின் சூர்யாவை வைத்து அவர் இயக்கிய படம்தான் ஜெய்பீம்.
பல வருடங்களுக்கு முன்பு நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது இருளர் குடும்பம் ஒன்றின் மீது காவல் அதிகாரிகள் பொய் வழக்கு போட்டு சித்ரவதை செய்தனர். இதில், இருளர் ஒருவர் பலியானார். இந்த சம்பவத்தை கதையாக எடுத்து திரைக்கதை அமைத்திருந்தார் ஞானவேல்.
நீதிபதி சந்துரு வேடத்தில் சூர்யா நடித்திருந்தார். இந்த படம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதோடு, சமூகவலைத்தளங்களில் விவாதங்களையும் ஏற்படுத்தியது. இருளர் இனத்திற்கு ஆதரவாக அரசு சில திட்டங்களையும் கொண்டு வந்தது. இதுவே ஜெய்பீம் படத்தின் வெற்றியாக பார்க்கப்பட்டது.
அதன்பின் லைக்கா தயாரிப்பில் ரஜினி நடிக்கும் வேட்டையன் படத்தை இயக்கி முடித்திருக்கிறார் ஞானவேல். இந்த படம் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ஏற்கனவே இந்த படத்திற்கு முன்பதிவு மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஏனெனில், ஜெயிலர் ஹிட்டுக்கு பின் ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள படம் இது.
ஒருபக்கம், சமூக கருத்துள்ள படத்தை எடுக்கும் ஞானவேல் ரஜினியை வைத்து எப்படி படம் எடுப்பார்? அது ரஜினிக்கு செட் ஆகுமா? அவர் மாஸ் படங்களில்தான் நடிப்பார் என்றெல்லாம் பலரும் பேசினார்கள். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேட்டியளித்த ஞானவேலிடம் இது தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் சொன்ன ஞானவேல் ‘நான் சொன்ன கதை ரஜினி சாருக்கு பிடித்திருந்தது. அதை தயாரிக்க ஒரு நிறுவனம் முன் வந்தது. அதில் நான் என்ன பண்ண முடியுமோ அதை செய்திருக்கிறேன். அதுதான் என் எல்லை. அதைத்தாண்டி யோசிக்க என்ன இருக்கிறது?. இவர் என்ன நினைப்பார்?. அவர்கள் என்ன நினைப்பார்கள்? என யோசித்தால் எதையுமே செய்ய முடியாது. நான் என்ன எடுத்திருக்கிறேனோ அதுபற்றி நீங்கள் பேசுங்கள். ஆனால், நான் என்ன எடுக்க வேண்டும் என நீங்கள் பேசாதீர்கள்’ என பொங்கியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…