எது பண்ணாலும் குறை சொல்லுவாங்க!.. மஞ்சு வாரியர் விஷயத்தில் பொங்கிய ஞானவேல்!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:37:51  )

மலையாள உலகின் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகை மஞ்சு வாரியார். அவர் தமிழில் அசுரன் துணிவு போன்ற படங்களில் நடித்து தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து மூன்றாவது தமிழ் படமான வேட்டையன் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார் மஞ்சு வாரியார்.

படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அவருடைய மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மஞ்சு வாரியார். ஆனால் ரஜினியின் படங்களை பொருத்தவரைக்கும் தன்னுடன் நடிக்கும் பெண் கதாபாத்திரங்களுக்கு சமமான ஸ்கிரீன் ஸ்பேஸ் கொடுப்பவர் ரஜினி என அனைவருக்குமே தெரியும்.

ஆனால் வேட்டையன் திரைப்படத்தில் மஞ்சுவாரியாருக்கு எதிர்பார்த்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பதுதான் அனைவரின் கருத்தாக பார்க்கப்படுகிறது. படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே மஞ்சுவாரியார் தோன்றி இருப்பார். ஒரு பாடல் மற்றும் ஒரு சில காட்சிகள் மட்டுமே படத்தில் வருவார்.

ஆனால் அவர் வரும் காட்சிகள் அனைவரையும் ஈர்த்ததாகவே அமைந்தது. படத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு காட்சியில் மஞ்சு வாரியார் நடித்திருந்தது அனைவருக்குமே ஒரு சர்ப்ரைஸ் ஆக இருந்தது. இந்த நிலையில் மஞ்சுவாரியாருக்கு ஏன் தேவையான முக்கியத்துவம் கொடுக்கவில்லை என இயக்குனர் ஞானவேலிடம் கேட்டபோது அதற்கான காரணத்தை கூறினார் ஞானவேல்.

அதாவது ரஜினியின் படத்தில் அறிமுகம் இல்லாத ஒருவரை நடிக்க வைத்தால் ஏன் ரஜினி படத்தில் ஒரு ஸ்டார் கூட போட மாட்டாங்களா என்ற ஒரு கேள்வி வரும். அப்படியே ஒரு ஸ்டாரை போட்டாலும் தேவையில்லாத சீனை வைக்க முடியாது. அந்தக் கதைக்கு அந்த சூழலுக்கு ஏற்ற வகையில் தான் நடிக்க வைத்தோம்.

கதைப்படி அவங்க ஒரு மனைவி. ரஜினி சார் ட்ரான்ஸ்பர் ஆகி வேறொரு இடத்திற்கு போகிறார். தன்னுடைய மனைவியை விட்டுவிட்டு தனியாக போகிறார். அப்போ மனைவியின் கதாபாத்திரம் என்பது கம்மியாகத்தான் வரும். அதையும் மீறி இவருக்காக ஒரு நான்கு ஐந்து சீன்களை எக்ஸ்ட்ரா வைத்தால் அப்பொழுதும் ஒரு கேள்வி வரும்.

இந்த சீன் எதுவுமே கதைக்கு பொருத்தமாக இல்லையே என்ற ஒரு கேள்விதான் எழும். அதனால் கதைக்கு எது தேவையோ அதன்படி தான் வைத்திருக்கிறோம் என ஞானவேல் கூறினார்.

Next Story