அடுத்து நான் பண்ண போறது வேற மாறி இருக்கும்!.. டிவிஸ்ட் கொடுத்த வேட்டையன் பட இயக்குனர்!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:34:20  )

Director tj gnanavel: பத்திரிக்கையாளராக இருந்து திரைப்பட இயக்குனராக மாறியவர் தா.ச.ஞானவேல். இவர் சென்னை லயோலா கல்லூரியில் படித்தவர். அதன்பின் தமிழ் இலக்கியத்தில் பி.எச்.டி பட்டம் பெற்றார். சில பத்திரிக்கைகளில் நிருபராக பணிபுரிந்திருக்கிறார். ராம்கோபால் வர்மா இயக்கத்தில் சூர்யா நடித்த ரத்த சரித்திரம் படத்தில் வசனம் எழுதியவர் இவர்தான்.

ராதாமோகன் இயக்கிய பயணம் படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்தார். அதன்பின் கூட்டத்தில் ஒருவன் என்கிற படம் மூலம் இயக்குனராக மாறினார். இந்த படத்தில் அசோக் செல்வனும், பிரியா ஆனந்தும் நடித்திருந்தனர். அதன்பின் சில வருடங்கள் கழித்து ஞானவேல் இயக்கிய திரைப்படம்தான் ஜெய்பீம்.

ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது ஒரு இருளர் குடும்பம் தொடர்பான வழக்கை 20 வருடங்கள் நடத்தி அவர்களுக்கு நீதியை பெற்று கொடுத்தார். போலீசாரின் பொய் வழக்கில் சிக்கிய ஒரு குடும்பம் என்னவானது என மனதை உருக வைக்கும் திரைக்கதை மூலம் திரைப்படமாக கொடுத்திருந்தார் ஞானவேல்.

இந்த படம் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, இருளர் இனத்திற்கு தமிழக அரசு உதவி செய்யும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. இந்த படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் சூர்யா. பல திரைப்பட விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டு விருதுகளை பெற்றது.

இந்த படத்திற்கு பின் ரஜினியை வைத்து வேட்டையன் படத்தை இயக்கினார் ஞானவேல். போலீசார் செய்யும் என்கவுண்டருக்கு பின்னால் இருக்கும் அரசியலை இப்படம் பேசி இருந்தது. அதோடு, என்கவுண்டருக்கு எதிரான படமாகவும் இப்படத்தை இயக்கியிருந்தார். வேட்டையன் படம் பெரிய வெற்றி இல்லை என்றாலும் தயாரிப்பாளருக்கு லாபமே.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய ஞானவேல் ‘2 சீரியஸான படங்களை இயக்கி விட்டேன். அடுத்து ஒரு ஜாலியான படம் ஒன்றை இயக்க போகிறேன்’ என சொல்லி இருக்கிறார்.

Next Story