1. Home
  2. Cinema News

லட்சிய நடிகரை பரிந்துரை செய்த எம்ஜிஆர்! வக்கீல் நோட்டீஸ் அனுப்பி ஆசையில் மண்ணள்ளிப் போட்ட நிறுவனம்

லட்சிய நடிகரை பரிந்துரை செய்த எம்ஜிஆர்! வக்கீல் நோட்டீஸ் அனுப்பி ஆசையில் மண்ணள்ளிப் போட்ட நிறுவனம்

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற ஒரு பழமொழி உண்டு. அந்த பழமொழி மற்ற எல்லா துறைகளையும் விட சினிமா துறையில் மிகப் பொருத்தமாக இருக்கும். இதைப்பற்றி பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் ஒரு சுவாரசியமான சம்பவத்தை எடுத்துரைத்திருக்கிறார் அவர் கூறியது. எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் ராஜகுமாரி. அந்தப் படத்தை தொடர்ந்து கருணாநிதி வசனம் எழுதிய இரண்டாவது திரைப்படம் ஆக அமைந்தது அபிமன்யு. இந்த படம் வெளியான போது படத்தின் டைட்டிலில் கருணாநிதி பெயர் இல்லை. எஎஸ்ஏ சாமியின் பெயர் மட்டுமே இடம்பெற்றிருந்தது. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இப்போது நாம் பார்க்கும் அபிமன்யு திரைப்படத்தில் அபிமன்யுவாக நடித்திருந்த நடிகரின் பெயர் எஸ் எம் குமரேசன். ஆனால் முதலில் இந்த கதாபாத்திரத்திற்கு முதலில் ஒப்பந்தமானவர் லட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன். அபிமன்யு படத்திற்கு எஸ் எஸ் ராஜேந்திரன் தான் பொருத்தமாக இருப்பார் என பரிந்துரை செய்தவர் எம்ஜிஆர். இந்த படத்தின் படப்பிடிப்பு கோவையில் நடந்த சமயம் படப்பிடிப்பிற்காக எஸ் எஸ் ராஜேந்திரன் சென்றபோது அவருடைய மேக்கப் ஒப்பனைகளிலிருந்து அனைத்தையும் கவனித்துக் கொண்டாராம் எம்ஜிஆர். அதைத்தொடர்ந்து அபிமன்யு படத்தில் எஸ் எஸ் ராஜேந்திரன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. எடுக்கப்பட்ட வரைக்கும் படத்தை பார்த்த தயாரிப்பாளர் மற்ற அனைவரும் எஸ் எஸ் ராஜேந்திரன் நடிப்பை பாராட்டி இருக்கிறார்கள். இப்படி அந்தப் படத்தில் எஸ் எஸ் ராஜேந்திரனின் நடிப்பை அனைவரும் பாராட்டி இருந்தாலும் தொடர்ந்து அந்த படத்தில் எஸ் எஸ் ராஜேந்திரனால் நடிக்க முடியாமல் போனதற்கு காரணம் டி கே எஸ் சகோதரர்கள் அனுப்பிய அந்த ஒரு வக்கீல் நோட்டீஸ். எஸ் எஸ் ராஜேந்திரனை பொறுத்த வரைக்கும் தங்களுடைய நாடகக் குழுவில் ஒப்பந்த நடிகர். இன்னும் ஏழு மாதங்கள் இருக்கின்றன அவருடைய ஒப்பந்தம் முடிய. அதுவரை அவர் வேற எந்த படத்திலும் நடிக்க முடியாது. அப்படி இருக்கும்போது அபிமன்யு படத்தில் நீங்கள் எப்படி அவரை ஒப்பந்தம் செய்தீர்கள்? என எங்களுக்கு தெரியவில்லை. உடனடியாக அந்த படத்தில் இருந்து நீங்கள் அவரை விடுவிக்க வேண்டும். இல்லை என்றால் நீதிமன்றத்திற்கு சென்று உங்கள் படத்திற்கு தடை கோரும் சூழ்நிலை எங்களுக்கு ஏற்பட்டு விடும் என்ற ஒரு நோட்டீசை ஜுபிட்டர் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு டி கே எஸ் சகோதரர்கள் அனுப்பி இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் எஸ்எஸ் ராஜேந்திரனின் மனநிலை எப்படியாக இருக்கும் என்பதை நம்மால் யோசிக்க முடிகிறது. இந்த நிலையிலும் ஜூப்பிட்டர் பிக்சர்ஸ் முதலாளி சோமசுந்தரம் பெருந்தன்மை மிக்கவராக நடந்து கொண்டிருந்தார். அதாவது எஸ் எஸ் ராஜேந்திரனிடம் ஆயிரம் ரூபாயை கொடுத்து இது ஜூபிட்டர் பிக்சர்ஸ் தருகின்ற முன்பணம். எங்களுடைய திரைப்படத் தயாரிப்பில் எதிலாவது உன்னை நிச்சயம் பயன்படுத்திக் கொள்கிறேன் என சொல்லி ஆறுதல் கூறி அனுப்பி வைத்தாராம்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.