செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை... பெல்ட்டால் அடித்த பிரபல நடிகர்!

ட் நடிகர் மோகன் பாபு அவரது மகன் மஞ்சு மனோஜ் இடையே சொத்து தகராறு நடைபெற்று வருகிறது. இதில் மகன் 30க்கும் மேற்பட்ட அடியாட்களை கூட்டி வந்து தன்னை தாக்கியதாக மோகன் பாபு காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்.
இதற்கு மருமகளும் உடந்தை என அவர்மீதும் புகாரளிக்க போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் மஞ்சு மனோஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மஞ்சு மனோஜ் வளர்ந்து வரும் நடிகர் என்பதால் இந்த விவகாரம் டோலிவுட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தநிலையில் செய்தி சேகரிக்க வீட்டுக்கு சென்ற பத்திரிக்கையாளர்களை பெல்ட்டால் மோகன் பாபு அடித்து விரட்டும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் பத்திரிக்கையாளர்களை அவர் விரட்டி,விரட்டி தாக்குவதை பார்த்து அனைவரும் பயந்து தலைதெறிக்க ஓடுகின்றனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது. பெரும்பாலும் பத்திரிக்கையாளர்கள் தான் தங்களை வளர்த்து விடுவதால் பிரபலங்கள் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அவர்களை தரக்குறைவாக நடத்துவதில்லை. நிலைமை இப்படியிருக்க மோகன் பாபு தனிமனித தாக்குதல் நடத்தி இருப்பதால் அவர்மீதும் வழக்கும் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னொரு புறம் சொத்துக்காக தந்தை-மகனே பகையாளிகளாக மாறி தாக்கி கொள்வதும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது அங்கே நடக்கும் இதுபோன்ற சம்பவங்களை வைத்துத்தான் திரைக்கதை அமைக்கிறார்களோ என்ற எண்ணத்தையும் தவிர்க்க முடியவில்லை. எது எப்படியோ இன்னும் கொஞ்ச நாள் இந்த டாபிக் தான் பேசுபொருளாக இருக்கப்போகிறது என்பது மட்டும் உண்மை.