‘இந்தியன் 2’ படத்துக்காக பொறுமை காத்த கமல்! ஒரு வேளை கூட்டணிக்காக இருக்குமோ? நாளை நடக்கப் போகும் சம்பவம்
நாளை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படமான இந்தியன் 2 திரைப்படம் உலகெங்கிலும் ரிலீசாக இருக்கின்றது. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் திரைப்படம் இந்தியன் 2.
இந்த கால சூழலுக்கு ஏற்ப அரசியலில் என்னென்ன விஷயங்களை பற்றி இந்த படத்தில் பேசி இருக்கிறார்கள் என்பதை பார்ப்பதற்காகவே அனைத்து தரப்பினரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியன் படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் இந்தியன் 2 திரைப்படமும் வரவேற்பை பெறுமா என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியன் படத்தின் முதல் பாகத்தை பொருத்தவரைக்கும் லஞ்ச ஊழலை அடிப்படையாகக் கொண்டு அந்த படத்தை எடுத்திருந்தார் சங்கர். இந்தியன்2 திரைப்படம் வேறு எந்த மாதிரியான கதைகளத்தில் வரப்போகிறது? அதை எப்படி இந்த கால அரசியல் சூழலுக்கு ஏற்ப ஷங்கர் எடுத்திருக்கிறார் என்பதுதான் அனைவரின் ஆர்வமாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்தியன் 2 படத்தை இன்னும் கமல் பார்க்கவே இல்லையாம். ஆனால் டப்பிங் பேசும்போது பார்த்திருந்தாலும் ஒரு முழு படமாக இன்னும் அவர் பார்க்கவில்லை என்பதுதான் செய்தியாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் நாளை படம் ரிலீஸ் ஆவதால் நாளைக்கு தான் கமல் அதை பார்க்க இருக்கிறாராம்.
அதோடு தனது அரசியல் தோழர்களுடன் அந்த படத்தை கமல் பார்க்கப் போவதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அது வேறு யாருமில்லை. தொல் திருமாவளவன் மற்றும் சீமான் இவர்களுடன் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தை கமல் பார்க்க இருக்கிறார் என்று கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.