கர்நாடகாவில் அதிக வசூல் செய்த தமிழ்ப்படங்கள் லிஸ்ட்... விஜயைப் பின்னுக்குத் தள்ளிய ரஜினி

by sankaran v |
கர்நாடகாவில் அதிக வசூல் செய்த தமிழ்ப்படங்கள் லிஸ்ட்... விஜயைப் பின்னுக்குத் தள்ளிய ரஜினி
X

கர்நாடகாவில் தமிழ்ப்படங்கள் எந்தளவில் வரவேற்பைப் பெற்றுள்ளன. தமிழ்சினிமா உலகில் உச்ச நட்சத்திரம் ரஜினி. இவருக்கு இணையான சம்பளத்தை வாங்கி முன்னுக்கு வருபவர் விஜய். ஆனால் அவரோ தனது கடைசி படம் தளபதி 69 என அறிவித்து விட்டார். அதனால் அடுத்த இடத்தை யார் பிடிக்கப் போகிறார் என்பதற்கு கடும்போட்டி நிலவுகிறது.

யார் முதலிடம்: இந்த நிலையில் கர்நாடகாவில் ரஜினி, விஜய் படங்களுக்கு மாஸ் எப்படி உள்ளது. யாருடைய படம் முதலிடம்னு பார்ப்போம்.அங்கு அந்தப் படங்களின் வசூல் அடிப்படையில் முதல் 10 இடங்களைப் பிடித்த படங்கள் எதுன்னு பார்ப்போமா...

எந்திரன்: 10வது இடத்தில் இருக்கும் படம் விஜய் நடித்த பிகில். இந்தப் படத்திற்கு கர்நாடகாவின் மொத்த வசூல் 19 கோடி. 9வது இடத்தில் இருக்கும் படம் ரஜினியின் எந்திரன். இந்தப் படத்திற்குக் கர்நாடக வசூல் 20.5 கோடி. 8வது இடத்தில் இருப்பது ரஜினியின் தர்பார். இந்தப் படத்தின் மொத்த வசூல் 21 கோடி. 7வது இடத்தில் இருப்பது கமல் நடித்த விக்ரம். இந்தப் படத்தின் கர்நாடக மொத்த வசூல் 23.3 கோடி.

கபாலி: 6து இடத்தில் இருப்பது விஜய் நடித்த கோட். இந்தப் படத்தின் வசூல் 27 கோடி. 5வது இடத்தில் இருப்பது பொன்னியின் செல்வன்1. இந்தப் படத்தின் மொத்த வசூல் 28.5 கோடி. 4வது இடத்தில் இருப்பது கபாலி. இந்தப் படத்தின் மொத்த வசூல் 34 கோடி. 3வது இடத்தில் இருப்பது 2.O. இந்தப் படத்தின் மொத்த வசூல் 55 கோடி.

ஜெய்லர்: 2வது இடத்தில் இருப்பது விஜயின் லியோ. இந்தப் படத்தின் கர்நாடக மொத்த வசூல் 62 கோடி. முதல் இடத்தில் இருப்பது ரஜினியின் ஜெய்லர். இந்தப் படத்தில் கர்நாடகாவின் மொத்த வசூல் 71.5 கோடி. எப்பவுமே கர்நாடகான்னா அங்கு சூப்பர்ஸ்டார்தான் வின்னர் என்பதையே இந்த லிஸ்ட் காட்டுகிறது.

Next Story