Categories: Cinema News latest news

ரிலீஸ் ஆகாமல் இருக்கும் டாப் 5 படங்கள்… இத நோட் பண்ணுங்கப்பா…

Kollywood: தமிழ் சினிமாவில் எல்லா படங்களுமே எடுக்கப்பட்டு ரிலீஸுக்கு சென்று விடுவதில்லை. மொத்த படமும் முடிந்தால் கூட பெட்டியில் தூங்கும் நிலை எல்லாம் இன்னமும் இருக்கிறது. அதுவும் பெரிய நடிகர்களின் படங்களே. அப்படி லிஸ்ட்டில் இருக்கும் டாப் 5 படங்கள் குறித்த தொகுப்புகள்.

சதுரங்க வேட்டை 2: சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சதுரங்க வேட்டை. முதல் பாகம் மிகப்பெரிய வசூல் குவிக்க இரண்டாம் பாகம் எடுக்க முடிவானது. அதில் ஹீரோவாக அரவிந்த் சாமி மற்றும் ஹீரோயினாக திரிஷா நடிக்க மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்திருந்தனர். ஆனால் இன்னும் இந்த படம் ரிலீஸ் செய்யப்படாமலே இருக்கிறது.

பிசாசு 2: இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பிசாசு2. 2014ம் ஆண்டு உருவான இப்படத்தில் சைக்கோ வில்லன் ராஜ்குமார் பிச்சமணி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். கார்த்திக் ராஜா இசையமைப்பில் இன்னமும் இப்படம் ரிலீஸ் செய்யப்படாமல் இருக்கிறது.

வா டீல்: அருண் விஜய் மற்றும் கார்த்திகா நடிப்பில் ரத்ன சிவா இயக்கத்தில் உருவாகி இருந்த இப்படம் பல நாட்களாக பெட்டியில் இருந்து 2021ம் ஆண்டு ரிலீஸுக்கு திட்டமிட்டு டீசரும் வெளியிட்டனர். ஆனாலும் அப்படம் ரிலீஸ் செய்யப்படாமலே இன்னமும் இருக்கிறது.

இறவாக்காலம்: எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பில் உருவாகி இருந்த இறவாக்காலம். மாயா என்னும் வெற்றிப்படத்தை கொடுத்த அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவான திரைப்படம். 2017ம் ஆண்டே இப்படத்தின் டீசர் வெளியாக படம் இன்னமும் பொட்டியில் தான் இருக்கிறது.

இடம் பொருள் ஏவல்: சீனு ராமசாமி இயக்கத்தில் லிங்குசாமி தயாரிப்பில் வெளியாக வேண்டிய திரைப்படம். விஜய் சேதுபதி அவர் தம்பியாக விஷ்ணு, நந்திதா ஸ்வேதா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் 2012ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் நிதி நெருக்கடியின் விளைவாக இந்தப் படம் இன்னமும் பெட்டியில் தான் இருக்கிறது.

Published by
ராம் சுதன்