2025 movies: ஒவ்வொரு வருடமும் தமிழில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அதில் எல்லாமே ஹிட் அடிப்பதில்லை. ஒவ்வொரு வருடமும் சில ஆயிரம் கோடிகள் பட்ஜெட்டில் திரைப்படங்கள் உருவாகிறது. ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் 300 முதல் 400 கோடி செலவு செய்து படமெடுக்கிறார்கள்.
ஆனால், அப்படி எடுக்கும் படங்கள் எல்லாம் ஓடுவதும் இல்லை. அப்படி ஓடாதபோது தயாரிப்பாளர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும். அப்படி இந்தியன் 2, கேம் சேஞ்சர் போன்ற படங்கள் படுதோல்வி அடைந்தன. அதேநேரம், சின்ன பட்ஜெட்டில் வந்த டூரிஸ்ட் ஃபேமிலி, டிராகன் போன்ற படங்கள் நல்ல வசூலை பெற்றது.
பெரிய பட்ஜெட் படங்களில் சில படங்கள் மட்டுமே வெற்றியை பெற்றது. அந்த வகையில் 2025 துவங்கியது முதல் இப்போதுவரை என்னென்ன படங்கள் அதிக வசூலை பெற்றது என பார்ப்போம். இந்த வருடத்தில் அதிக வசூலை பெற்று முதலிடத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி இருக்கிறது. இப்படம் 245.10 கோடி வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.
2வது இடத்தில் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் இருக்கிறது. இப்படம் 151.85 கோடி வசூலை அள்ளியது. 3வது இடத்தில் அஜித்தின் விடாமுயற்சி படம் இருக்கிறது. இப்படம் 138.10 கோடியை அள்ளியது. 4வது இடத்தில் கமலின் தக் லைப் படம் இருக்கிறது. இந்த படம் 98.55 கோடி வசூல் செய்திருக்கிறது.
சூர்யாவின் ரெட்ரோ படம் 97.55 கோடி வசூல் செய்து 5வது இடத்திலும், சின்ன பட்ஜெட் படமாக வெளிவந்த டூரிஸ்ட் ஃபேமிலி படம் 85.55 கோடி வசூல் செய்து 6வது இடத்திலும், விக்ரமின் வீர தீர சூரன் படம் 68.60 கோடி வசூல் செய்து 7வது இடத்திலும் இருக்கிறது. 2025ம் வருடம் துவங்கியபோது பொங்கலில் வணங்கான், காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட சில படங்கள் வெளிவந்தாலும் மதஜகராஜாதான் அதிக வசூலை பெற்றது. இந்த படம் 62.95 கோடி வசூலை பெற்று 8வது இடத்தில் இருக்கிறது.
அடுத்து சூரியின் மாமன் படம் 55.55 கோடி வசூல் செய்து 9வது இடத்திலும், குடும்பஸ்தன் திரைப்படம் 30.10 கோடி வசூல் செய்து 10வது இடத்திலும் இருக்கிறது. இந்த வசூல் எல்லாமே தியேட்டர் மூலம் கிடைத்த வசூல், ஓடிடி மற்றும் டிவி உரிமை, ஹிந்தி டப்பிங் உரிமை என எல்லாம் சேர்த்துதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரிப்போர்ட் ஜூன் மாதம் வரை மட்டுமே. அடுத்து 6 மாதங்களில் ரஜினியின் கூலி, சூர்யாவின் கருப்பு, தனுஷின் இட்லிக் கடை உள்ளிட்ட சில முக்கிய படங்கள் வெளியாகவுள்ளது. அந்த படங்கள் எவ்வளவு வசூலை பெறும் என்பதை பிறகு பார்ப்போம்.
மேலும், நேரடி தமிழ் படங்கள் மட்டுமே இதில் சொல்லப்பட்டிருக்கிறது. தனுஷின் குபேரா படம் 100 கோடி வசூல் என்றாலும் அது தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழில் டப் செய்யப்பட்டது. அதோடு, இந்த படத்திற்கு தமிழ்நாட்டில் வசூல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…