ராதாரவியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? தெரிஞ்சே இவ்ளவுனா.. தெரியாம எவ்ளோ இருக்கும்?

Published on: August 8, 2025
---Advertisement---

தமிழ் சினிமாவில் எத்தனையோ வில்லன் நடிகர்களை நாம் கடந்து வந்திருக்கிறோம். தனக்கென ஒரு தனி பாணியை வைத்து மிரட்டும் குரலால் அனைவரையும் மிரள வைத்தவர் ராதாரவி. கமல்ஹாசனால் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார் ராதாரவி. மன்மதலீலை படத்தின் மூலம்தான் இவர் தமிழுக்கு அறிமுகமானார். எந்த மேடையேறினாலும் அவருடைய சினிமா அனுபவத்தை பற்றி கூறும் போது கமலை குறிப்பிடாமல் அவர் இறங்கியதே இல்லை.

ராதாரவியின் வாழ்க்கையில் பெரும் பங்கு வகித்தவர் இயக்குனர் ராம நாராயணன். அதுமட்டுமில்லாமல் உயிருள்ள வரை உஷா படத்தில் டி.ராஜேந்திரன் இவரை வில்லனாக நடிக்க வைத்து பெரும் பங்கு ஆற்றினார். ஆனால் அந்த படத்தில்தான் முதன் முதலில் ராதாரவியை அவருடைய தந்தை எம்.ஆர்.ராதாவை போல் பேச வைத்து உலகையே திரும்பி பார்க்க வைத்தவர் எஸ்.எஸ்.சந்திரன்.

அதன் பிறகு சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் குணச்சித்திர நடிகராக மாறினார் ராதாரவி. வைதேகி காத்திருந்தாள் , உயர்ந்த உள்ளம் ,குரு சிஷ்யன் , ராஜாதி ராஜா , தை மாசம் பூ வாசம் , இது நம்ம பூமி, சின்ன முத்து மற்றும் இளைஞன் அணி (1994) போன்ற படங்களின் மூலம் தயாரிப்பில் இறங்கினார். நடிகர், குணச்சித்திர நடிகர் என்பதையெல்லாம் தாண்டி அரசியலிலும் சில காலம் பயணித்தார்.

நடிகர் சங்க செயலாளராகவும் இருந்தார். சினிமாவில் ஒரு பெரிய ஆளுமையாக இருந்தாலும் அவ்வப்போது சில சர்ச்சைகளிலும் சிக்குவார். சில சமயங்களில் பெண்களுக்கு எதிரான கருத்துக்களையும் கூறி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். மேலும் பொது இடங்கள் என்று பார்க்காமல் கோபம் வந்தால் சட்டென கோபப்பட்டும் பேசிவிடுவார். இதனால் ராதாரவி என்றாலே இப்படித்தான் என அவர் மீது மக்களுக்கு ஒரு நிலைப்பாடு இருக்கிறது.

radharavi

radharavi

இந்த நிலையில் ராதாரவியின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது. அவரே அதை பற்றி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். சமீபத்தில் ஒரு இடத்தை விற்க சொல்லி அவரது மனைவி சொன்னாராம். அது 40 லிருந்து 50 லட்சம் வரை போயிருக்கிறது. இதுவே அந்த முழு இடத்தையும் விற்றிருந்தால் இன்னும் பல மடங்கு போயிருக்கும். அதனால் ஒரு 200 கோடி சொத்து இருக்கலாம் என ஒரு யூகத்தின் அடிப்படையில் கூறியிருக்கிறார் ராதாரவி.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment