மெகா பட்ஜெட்டில் உருவாகும் எஸ்.கே. 25!.. தயாரிப்பாளர்கள் மட்டும் இவ்வளவு பேரா?!...
விஜய் டிவியில் ஆங்கராக பணிபுரிந்து வந்தவர் சிவகார்த்திகேயன். காலேஜ் முடித்துவிட்டு சில இசை நிகழ்ச்சிகளில் மிமிக்ரி செய்து கொண்டிருந்தார். அதன்பின் டிவிக்கு போனார். சில வருடங்கள் அங்கிருந்த சிவகார்த்திகேயன் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டினார். பல கம்பெனிகளிலும் ஏறி இறங்கினார்.
ஒருவழியாக பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதன்பின் மனம் கொத்தி பறவை படத்தில் நடித்தார். தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த எதிர் நீச்சல் திரைப்படம் அவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. அதன்பின் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் அவரை முன்னணி நடிகர்களில் ஒருவராக மாற்றியது.
தொடர்ந்து ரஜினி முருகன் ஹிட் படத்தை கொடுத்தார். ரெமோ படத்தில் பெண் வேடம் போட்டு அசத்தலாக நடித்திருந்தார். குறுகிய காலகட்டத்தில் பல நடிகர்களையும் ஓவர் டேக் செய்து அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார். வளர்த்துவிட்ட தனுஷிடமே இப்போது அவர் பேசுவதில்லை.
அதோடு, தனுஷுக்கு நெருக்கமாக இருந்த அனிருத்தையும் தன் பக்கம் இழுத்துகொண்டார். சில சர்ச்சைகளில் சிக்கினாலும் சிவகார்த்திகேயனின் மார்கெட் நிலவரம் குறையவில்லை. இப்போது ராஜகமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அமரன் படத்தில் நடித்து முடித்துவிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார்.
இப்போது சூர்யா நடிக்கவிருந்த புறநானூறு படத்தையே தட்டி தூக்கியிருக்கிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் இப்படம் உருவாகவுள்ளது. 1950களில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகவுள்ளது. இந்த படத்தின் கதையில் சூர்யா சில மாற்றங்களை செய்ய சொல்ல சுதா கொங்கரா மறுக்கவே இப்படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டார்.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள இப்படத்தை மாவீரன் படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ், சுதா கொங்கராவின் மீனாட்சி சினிமாஸ் நிறுவனம், உதயநிதியின் உறவினர் ரத்தீஷ் மற்றும் பெங்களூர் கேவிஎன் நிறுவனம் என மொத்த 4 நிறுவனங்கள் இணைந்து மெகா பட்ஜெட்டில் இப்படத்தை உருவாக்கவுள்ளனர். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் துவங்கவிருக்கிறது. இது சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.