Categories: Cinema News

நாலு படத்திலும் நல்ல ரோல் இல்லை!.. சூர்யா படத்திலாவது ஜொலிப்பாரா தலைவி த்ரிஷா?..

நடிகை த்ரிஷா நடிப்பில் இந்த வருடம் ஐடென்டிட்டி, விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப் என இது வரை நான்கு படங்கள் வெளியாகியும் எந்த படத்திலும் த்ரிஷாவின் கதாப்பாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை. அடுத்ததாக சூர்யாவின் 45வது படத்திலும் நடித்துள்ள த்ரிஷாவுக்கு அந்த படமாவது நல்ல பெயரையும் பாராட்டுக்களையும் பெற்றுத் தருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

டொவினோ தாமஸின் மலையாள படமான ஐடென்டிட்டி திரைப்படம் ஜனவரி 2ம் தேதியே வெளியானது. அந்த படத்தில் த்ரிஷாவுக்கு நல்ல ரோல் தான் என்றாலும், அவர் பெரிதாக ஷைன் ஆகவில்லை. அதே போல அஜித் குமாரின் விடாமுயற்சி படத்தில் த்ரிஷாவை அர்ஜுன் கடத்திக் கொண்டு போக, கடைசி வரையில் ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கிறார்.

குட் பேட் அக்லி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை செய்திருந்தாலும் த்ரிஷாவின் பங்களிப்பு படத்தில் பெரிதாக இல்லை. தக் லைஃப் படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்து சிலர் அவரது பாத்திரத்தை “டம்மி ரோல்” என்றும், வயதான கமலுக்கு செகண்ட் சேனலாக இப்படி நடித்திருக்கிறாரே என்றும் கடுமையான விமர்சனங்களை தெரிவித்தனர்.

96, பொன்னியின் செல்வன் போன்ற சில படங்களில் நடித்து த்ரிஷா ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதை தொடர்ந்து நடிக்கும் படங்களில் அவரது கதாப்பாத்திரம் வெகுவாக பேசப்படாமல் இருப்பது குறித்து பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இருப்பினும், த்ரிஷா தனது 42-வது வயதிலும் தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருவது, அவரது இளமையான தோற்றம், திறமை மற்றும் ரசிகர்களின் ஆதரவை வெளிப்படுத்துகிறது.

நடிகை த்ரிஷா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில், தனது செல்லப்பிராணியுடன் உடற்பயிற்சி, மேக்கப் இல்லா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என தொடர்ந்து பல நிகழ்வுகளை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தக் லைஃப் படத்தின் ப்ரோமோஷனுக்கு ரெடியான அவுட்ஃபிட்டுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதை தொடர்ந்து தற்போது சிகப்பு மற்றும் கருப்பு நிற உடையில் உள்ள கியூட்டான புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘வேட்டைக் கறுப்பு’ என எதிர்பார்க்கப்படும் படத்திலாவது த்ரிஷாவுக்கு நல்ல கதாபாத்திரம் அமைய வேண்டும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

Published by
Saranya M