சமந்தாவும் சூப்பர் ஸ்டார் தான்!.. ஆலியா பட்டை வைத்துக் கொண்டே ஓ பேபியை புகழ்ந்த இயக்குனர்!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:39:35  )

பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிப்பில் உருவாகியுள்ள ஜிக்ரா திரைப்படம் வரும் அக்டோபர் 11-ஆம் தேதி வெளியாகிறது. அந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.

ஆலியா பட் தனது நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகை சமந்தாவை அழைத்திருந்த நிலையில், மேடையில் சமந்தா குறித்து ஆலியா பட் மற்றும் இயக்குனர் திரிவிக்ரம் புகழ்ந்து பேசிய காட்சிகள் சமந்தாவையும் சமந்தா ரசிகர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் போல சமந்தாவும் தமிழ், தெலுங்கு, இந்தி என இந்தியா முழுவதும் ரசிகர்களை கொண்டவர் என திரிவிக்ரம் பாராட்டி பேசியிருந்தார்.

நடிகை ஆலியா பட் பேசும்போது சினிமாவில் மட்டுமன்றி நிஜ வாழ்க்கையிலும் நீங்கள் ஒரு சூப்பரான ஹீரோதான் என சமந்தாவை பாராட்டினார். நடிகை ஆலியா பட் சமந்தாவை பாராட்டி பேசிய வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஆலியா பட்டை வைத்துக்கொண்டே திரிவிக்ரம் சமந்தாவை ரஜினிகாந்த் உடன் ஒப்பிட்டு பேசியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் நடிகை சமந்தா குறித்து தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா படு மோசமாக பேசியது தெலுங்கு திரை உலகினரை கொந்தளிக்க செய்தது.

ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன், நானி, நாகசைதன்யா, நாகார்ஜுனா, அமலா மற்றும் சிரஞ்சீவி உள்ளிட்ட பல பிரபலங்கள் அமைச்சருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர். மேலும் நாகர்ஜுனா அமைச்சருக்கு எதிரான வழக்கையும் தொடர்ந்துள்ளார். இந்நிலையில், அலியாபட்டின் பிரமோஷன் நிகழ்ச்சிக்கு வருகை தந்த சமந்தாவை அனைவரும் கொண்டாடினர்.

வாசன் பாலா இயக்கத்தில் ஆலியா பட், வேதாங் ரைனா, ஆதித்யா நந்தா மற்றும் ராகுல் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ரஜினிகாந்தின் வேட்டையன் படத்துக்கு போட்டியாக தமிழில் ஜீவா நடித்த பிளாக் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், கன்னடத்தில் மார்ட்டின் படமும் இந்தியில் ஆலியா பட்டின் ஜிக்ரா படமும் வெளியாகிறது.

Next Story