More
Categories: Cinema News

இத கூட சரியா செய்யமாட்டீங்களா…? ஏன் இந்த சொதப்பல்… உச்சகட்ட கோபத்தில் விஜய்…!

ஒட்டுமொத்த தமிழகமே இன்று எதிர்நோக்கி கொண்டிருக்கும் விஷயம் என்னவென்றால் விஜயின் முதல் மாநாடு தான். தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வளம் வந்த நடிகர் விஜய் திடீரென்று தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற அரசியல் கட்சியை தொடங்கி இருக்கின்றார். இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது கட்சியை அறிமுகம் செய்த விஜய் அதன் பிறகு கட்சியின் பெயர், கொடி என அனைத்தையும் அடுத்தடுத்து செய்து வந்தார்.

இன்று விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி சாலையில் மாநாடு நடைபெற உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த மாநாடு தொடர்பான அனைத்து வேலைகளும் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வந்தது. மாநாடு திடலில் பெரியார், அம்பேத்கர், காமராஜர், அஞ்சலையம்மாள், வேலுநாச்சியார், தமிழ் அன்னை, சேரர், சோழர், பாண்டியர் என தமிழக மண்ணின் வரலாற்றில் மிக முக்கிய இடங்களை பிடித்த நபர்களின் கட் அவுட்.

Advertising
Advertising

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாட்டு மண்ணின் மைந்தர்களின் புகைப்படங்களும் பேனரில் இடம்பெற்று இருந்தது. இவர்களுக்கு நடுவே விஜயின் கட்அவுட் வைக்கப்பட்டிருந்தது பலரையும் கவர்ந்திருந்தது. அது மட்டுமில்லாமல் மிகப் பெரிய அளவில் மேடை அமைக்கப்பட்டு மாநாடு அரங்கம் பிரம்மாண்டமாக ரெடியாகி இருந்தது. காலை முதலே தொண்டர்கள் சாரை சாரையாக மாநாட்டிற்கு செல்ல படை எடுத்து வருகிறார்கள்.

மொத்தம் மாநாட்டு திடலுக்கு செல்வதற்கு மூன்று வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளியில் செல்ல ௧௦-க்கும் மேற்பட்ட வழிகள் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு திடலில் 50,000 இருக்கைகள் போடப்பட்டிருக்கின்றன. மாநாட்டை சிரமமில்லாமல் பார்ப்பதற்கு மாநாட்டு பந்தல் முதல் தேசிய நெடுஞ்சாலை வரை led திரைகள் அமைக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் 300 மொபைல் கழிவுறைகள் மற்றும் 700 குடிநீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இது மட்டும் இல்லாமல் மாநாடு திடலில் 150 மருத்துவர்கள் உட்பட 350 பேர் அடங்கிய மருத்துவ குழு உடன் 17 மருத்துவ மையங்களும் அமைக்கப்பட்டு இருக்கின்றது. இப்படி அனைத்துமே மிக சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இருப்பினும் வெயில் கொளுத்தி வருவதால் மாநாட்டில் கலந்து கொண்ட தொண்டர்கள் அடுத்தடுத்து நூற்றுக்கணக்கானோர் மயங்கி விழுந்து வருகிறார்கள்.

மேலும் அவர்கள் ஒழுங்காக தண்ணீர் வினியோகம் செய்யவில்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறார்கள். நேற்று இரவு கேரவன் மூலமாக மாநாடு நடக்கும் இடத்திற்கு சென்றிருக்கும் நடிகர் விஜய் இதனை கேரவனில் இருந்து பார்வையிட்டு மாநாட்டு ஒருங்கிணைப்பு குழுவினர் மீது கடும் கோபத்தை காட்டி இருக்கின்றார். இதையெல்லாம் சரியாக திட்டமிடவில்லையா? ஏன் இந்த சொதப்பல் ஏற்பட்டுள்ளது என்று ஒருங்கிணைப்பு குழுவிடம் காட்டமாக பேசி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

Published by
ராம் சுதன்

Recent Posts