More
Categories: Cinema News

முழு அரசியல்வாதியாகவே மாறிய விஜய பாருங்க… பேக் டு பேக் அறிக்கை… இப்ப என்ன சொல்லி இருக்காரு..?

தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கக்கூடிய நடிகர்களில் முதலிடத்தில் இருப்பவர் நடிகர் விஜய். பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வரும் இவர் அதையெல்லாம் விட்டுவிட்டு தமிழக மக்களுக்காக அரசியலில் குதித்து இருக்கின்றார். தமிழக வெற்றி கழகம் என்கின்ற கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் தொடர்ந்து கட்சியின் பெயரை முறையாக பதிவு செய்வது அதைத் தொடர்ந்து கட்சியின் கொடி, பாடல், கொள்கைகள் முதல் மாநாடு என அனைத்தையும் மிகச் சிறப்பாக நடத்தி முடித்து விட்டார்.

இந்த வருடம் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி தனது கட்சியை அறிவித்திருந்தாலும் கடந்த எட்டு மாதங்களாக அமைதியாக இருந்தார். இதுவே பல விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தது. என்ன பேருக்கு கட்சியை தொடங்கிவிட்டு படங்களில் நடிக்க சென்று விட்டார் என்று பலரும் தங்களது கருத்துக்களை கூறி வந்தார்கள்.

Advertising
Advertising

ஆனால் கடந்த சில மாதங்களாக ஃபயர் மோடில் அடுத்தடுத்து கட்சியின் செயல்பாடுகளை நடத்தி வருகின்றார். செப்டம்பர் மாதமே மாநாடு தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இடம் பிரச்சனை, அனுமதி என பல சிக்கல்கள் காரணமாக அக்டோபர் மாதம் 27ஆம் தேதி மாநாடு நடைபெற்றது. விஜயின் அரசியல் நடவடிக்கைகளை மாநாட்டிற்கு முன் மாநாட்டிற்கு பின் என இரண்டாக பிரிக்கும் அளவிற்கு முற்றிலும் மாறி இருக்கின்றார்.

மாநாட்டிற்கு சுமார் 50,000 வருவார்கள் என்று கணிக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 8 லட்சத்துக்கு மேல் தொண்டர்கள் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்கள். கூட்டத்தை காவல்துறையினரால் கட்டுப்படுத்தவே முடியவில்லை என்ற சூழல் உருவானது. முதல் மாநாட்டினை மிக வெற்றிகரமாக நடிகர் விஜய் நடத்தி முடித்து இருக்கின்றார். இது பலரின் கவனத்தை பெற்றிருக்கின்றது.

மேலும் மாநாட்டில் அவர் பேசிய பேச்சு பல அரசியல் தலைவர்களை உற்று நோக்க வைத்துள்ளது. சிலர் இதற்கு வரவேற்பு தெரிவித்திருந்தாலும், சிலர் விஜயின் பேச்சுக்கு விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். மாநாட்டில் மறைமுகமாகவும் நேரடியாகவும் பல அரசியல் கட்சிகளை தாக்கி பேசி இருந்தார். நடிகர் விஜய் மாநாட்டிற்கு பிறகு முழுக்க முழுக்க ஒரு அரசியல்வாதியாக மாறி இருக்கின்றார் என்று தான் கூற வேண்டும்.

இரண்டு தினங்களுக்கு முன்பு முத்துராமலிங்க தேவரின் குரு பூஜையை முன்னிட்டு அவரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அவரைக் குறித்து சில விஷயங்களையும் பகிர்ந்திருந்தார். இதை தொடர்ந்து இன்று நவம்பர் 1ஆம் தேதி மதராஸ் மாகாணமாக இருந்த நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் எப்படி உருவானது என்பது குறித்து பேசி இருக்கின்றார்.

அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘1956 இல் மொழி வாரியாக மாகாணங்கள் அமைக்கப்பட்டதன் மூலமாக நம்முடைய மாநிலம் நிலப்பரப்பு அளவில் தனி மாநிலமாக உருவெடுத்த தினம் இன்று. மதராஸ் மாகாணமாக இருந்த நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டக் கோரி சங்கரலிங்கனார் உண்ணாவிரத போராட்டமிருந்து உயிர் பிறந்தார்.

இதனை தன் இதயத்தில் தாங்கிய பேரறிஞர் அண்ணா தான் ஆட்சிக்கு வந்ததும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி தமிழ்நாடு என்ற பெயரை சூட்டினார். இந்த தினத்தை நாம் தமிழ்நாடு தினமாக போற்றி மகிழ்வோம் என்று பதிவிட்டு இருக்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் பேக் டு பேக் அறிக்கை வெளியிட்டு முழு அரசியல்வாதியாக மாறி இருக்கும் நடிகர் விஜயை பாருங்கள் என்று கூறி வருகிறார்கள்.

Published by
ராம் சுதன்

Recent Posts