புயலை வானு கூப்பிட கூடாது. அது வரும் போது சம்பவமா இருக்கும்… விஜயால் தெறிக்கும் சோஷியல் மீடியாக்கள்…
TVK Vijay: நடிகர் விஜயை சில வாரங்களாகவே பலரும் வொர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் செய்கிறீர்களா என ஓவரா கலாய்த்து கொண்டு இருந்தனர். ஆனால் அவரின் முதல் பயணமே சூறாவளியாக மாறி ஏன்டா கேட்டோம் நிலைக்கு பலரும் தள்ளப்பட்டு இருக்கின்றனர்.
நடிகர் விஜய் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் இருந்து விலக இருப்பதாகவும், தொடர்ந்து கட்சியை ஆரம்பிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்ற கோட்பாடுடன் இருக்கிறார்.
அறிவிப்பு பெரிய அளவில் தீயை பற்ற வைத்தது. தொடர்ந்து எதற்கும் அவசரப்படாமல் பொறுமையாக காய் நகர்த்தி வருகிறார். அந்த வகையில் கட்சி கொடி அறிமுகம் என எல்லாமே மாஸ் நிகழ்வுகளாக மாறியது. அதில் அவருக்கு எதிராக விமர்சனங்களும் எழுந்தது.
இதை தொடர்ந்து முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் நடந்தது. பல லட்சம் மக்கள் கூடிய கூட்டத்தில் விஜயின் அரசியல் பேச்சை கேட்ட பலரும் மிரண்டனர். எங்கு எப்படி பேச வேண்டும் என தெரிந்த அவருக்கு அந்த மேடை பெரிய அளவில் சிக்கலை கொடுக்கவில்லை. பல இடங்களில் டிரெண்டிங் ஆனார்.
ஆனால் அதை தொடர்ந்து பெரிதாக தலை காட்டாமல் இருந்து வந்தார். முக்கிய நிகழ்வுகளுக்கு மட்டும் அறிக்கை மற்றும் புகைப்படங்கள் வெளியானது. அதிலே விஜயை பலரும் தொடர்ந்து வொர்க் ஃப்ரம் ஹோம் அரசியலா பண்ணுறீங்க எனவும் கேள்வி வைத்தனர்.
தற்போது முதல்முறையாக அரசியல் தலைவராக களத்தில் இன்று இறங்கினார். பரனூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் விவசாயிகளை சந்திக்க நேரடியாக களத்திற்கு சென்று அங்கு இருந்த மக்களை இறங்கி சந்திக்க முடியாமல் கேரவனிலே 10 நிமிடம் உரையாற்றினார்.
தற்போது விஜய் ரசிகர்கள் அவரை களத்துக்கு வா களத்துக்கு வானு கூப்பிட்டீங்களே. இப்போ அவரோட ஒரு அரசியல் பேச்சுக்கே தமிழ் மீடியாவில் இருந்து தேசிய செய்திகள் எல்லாம் அவரை பற்றியே பேசுகிறது. அதிலும் அவர் பேசியதை இல்லாமல் என்ன பேச போகிறது என்பதற்கே பல மீடியாக்கள் வீடியோக்கள் போட்டு வைரலாகி கொண்டது.
அவருக்கு இன்னும் தேர்தலுக்கே ஒரு வருடம் இருக்கிறது. படத்தை முடிச்சிட்டு வந்தா எல்லா வேலையும் முடிஞ்சிரும். புயலை வா வானு கூப்பிடக்கூடாது. அது வந்த சம்பவமா இருக்குனு வீடியோக்கள் போட்டு விஜயை கலாய்த்தவர்களை விமர்சித்து வருகின்றனர்.