2024 movies: சினிமா என்பது ரசிகர்களுக்கு பொழுதுபோக்கு என்றாலும் அதை சார்ந்துள்ள நடிகர்கள், இயக்குனர்கள, தயாரிப்பாளர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் தொழிலார்களுக்கு அதுதான் வாழ்க்கை. கலை என்பதை தாண்டி தயாரிப்பாளர்களுக்கு சினிமா என்பது வியாபாரம் மட்டுமே. இந்த நடிகர், இவ்வளவு கோடி பட்ஜெட், இவ்வளவு லாபம் என்பதுதான் தயாரிப்பாளர்களின் கணக்கு.
விஜய்க்கு 200 கோடி சம்பளம். பட்ஜெட் 200 கோடி என மொத்தம் 400 கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தை ஒரு தயாரிப்பாளர் எடுக்கிறார் எனில் 400 கோடியை தாண்டி அவருக்கு சில நூறு கோடிகள் லாபமாக கிடைக்கும் என்பதால்தான். அதேநேரம், எல்லா படங்களும் வெற்றியை பெற்று தயாரிப்பாளர்களுக்கு லாபமாக அமைவதில்லை.
குறைந்தது வருடத்திற்கு 250 படத்திற்கும் மேல் தயாராகி வெளியாகிறது. ஆனால், அதில் வெற்றி பெற்ற படங்களின் எண்ணிக்கை 30ஐ விட குறைவாக இருக்கும். ஆனாலும், சினிமா இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. நடிகர்களும், மற்றவர்களும் சம்பளம் வாங்கிக்கொண்டு சென்றுவிடுவார்கள். ஆனால், லாப நஷ்ட கணக்கு தயாரிப்பாளருக்கு மட்டுமே.
சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகரின் படம் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூலை பெறுகிறதோ அதை வைத்தே அவரின் மார்க்கெட் மதிப்பை கணக்கிடுவார்கள். வெற்றி எனில் ஹீரோக்களின் சம்பளம் உயரும். தோல்வி எனில் சம்பளம் குறையும். இதுதான் காலம் காலமாக உள்ள நடைமுறை.
2024ம் வருடத்தை பொறுத்தவரை கோலிவுட்டில் வெளியான பெரும்பாலான படங்கள் ஓடவில்லை. அரண்மனை 4, வாழை, ராயன், பிளாக், கோட், வேட்டையன், லப்பர் பந்து, டிமாண்டி காலணி 2, மகாராஜா, மெய்யழகன், கருடன், அமரன் ஆகிய படங்கள் மட்டுமே ஹிட் அடித்து தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்தது.
அதேநேரம், 200 படங்களுக்கும் மேல் ஓடவில்லை. குறிப்பாக அமரன் திரைப்படத்திற்கு பின் வெளியான கங்குவா, சொர்க்கவாசல், சூது கவ்வும் 2 என 26 படங்கள் ஓடவில்லை. ஒருபடம் வெற்றி.. 25 படங்கள் தோல்வி என்கிற நிலைமைதான் இன்னமும் தமிழ் சினிமாவுக்கு இருக்கிறது. விடுதலை ௨ வெற்றியா இல்லையா என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…