தவெக மாநாடு: ஆர்வக்கோளாறில் ரயிலில் இருந்து குதித்த விஜய் ரசிகர் மரணம்!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:33:09  )

Tvk manadu: நடிகர் விஜய் துவங்கியள்ள அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு இன்று மாலை விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டியில் நடக்கவுள்ளது. எனவே, இன்று அதிகாலை முதலே விஜய் ரசிகரக்ளும், கட்சி தொண்டர்களும் அதிக அளவில் மாநாடு நடக்கும் இடத்திற்கு வர துவங்கினார்கள்.

தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து மட்டுமில்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் வந்து கொண்டிருக்கிறார்கள். இதில் பலரும் விஜயை நேரில் பார்க்கவும், அருகில் பார்க்கவுமே ஆர்வமாக வருகிறார்கள். அதோடு, விஜய் இதுவரை எந்த மேடையில் ஒன்றரை மணி நேரம் பேசியது இல்லை.

ஆனால், இன்று மாலை மாநாடு திடலில் 6 மணி முதல் 7.30 மணி வரை பேசவிருக்கிறார் என சொல்லப்படுகிறது. எனவே, அவரின் பேச்சை கேட்க ஆர்வமாக பலரும் செல்கிறார்கள். நிறைய பெண் ரசிகைகளும் மாநாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, அங்கு பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், மாநாடு தொடர்பாக சில அசம்பாவிதங்களும் நடந்து வருகிறது. நேற்று இரவு சென்னையிலிருந்து பைக்கில் மாநாட்டுக்கு கிளம்பிய விஜய் ரசிகர்கள் இருவர் தேனாம்பட்டை அருகே வந்தபோது மணல் லாரி மோதி விபத்தில் சிக்கினர். இதில், ஒருவர் உயிரிழந்தார். ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிகழ்வே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், ரயிலில் இருந்து குதித்து ஒரு விஜய் ரசிகர் மரணமடைந்திருக்கிறார். சென்னையிலிருந்து மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 2 பேர் ரயில் வந்திருக்கிறார்கள். விழுப்புரத்திரத்திற்கு டிக்கெட் எடுத்திருந்த அவர்கள் விக்கிரவாண்டி பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது மாநாட்டுக்கு போடப்பட்டிருந்த மின் விளக்குகளை பார்த்ததும் உற்சாக மிகுதியில் இருவரும் ரயிலில் இருந்து கீழே குதித்திருக்கிறார்கள்.

இதில், படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில், நிதிஷ்குமார் என்பவர் சிகிச்சை பலனிக்காமல் மரணமடைந்தார். மற்றொருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விக்கிரவாண்டி வந்ததும் ரயில் கொஞ்சம் மெதுவாக சென்றதால் அவர்கள் கீழே குதித்ததாக சொல்லப்படுகிறது.

இதுவரை விஜய் மாநாட்டுக்கு சென்ற இரண்டு வாலிபர்கள் மரணமடைந்திருக்கிறார்கள். வேறொரு இடத்தில் மாநாட்டுகு சென்ற ஒரு வேன் விபத்தில் சிக்கியது. ஆனால், அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பியிருக்கிறார்கள்.

Next Story