தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர் என்கின்ற பட்டியலில் இணைந்து இருக்கின்றார் நடிகர் சிவகார்த்திகேயன். அதற்கு காரணம் அமரன் திரைப்படம், இந்த திரைப்படம் கடந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் முகுந்து வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.
படம் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் 360 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கின்றது. இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகர்களில் ஒருவராக மாறி இருக்கின்றார் சிவகார்த்திகேயன். இந்த திரைப்படத்தை முடித்த கையோடு நடிகர் சிவகார்த்திகேயன் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து டான் திரைப்படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் பாஸ் என்கிற திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கின்றார். ஆனால் இப்படத்தின் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க இருக்கும் எஸ் கே 25 என்ற திரைப்படத்தின் அறிவிப்பு மற்றும் பூஜை தொடர்பான புகைப்படங்கள் வெளியானது.
இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் முதலில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தது சூர்யா தான். புறநானூறு என்கின்ற டைட்டிலில் படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு சூர்யா இப்படத்தில் இருந்து வெளியானதற்கு பிறகு தற்போது சிவகார்த்திகேயனை வைத்து இந்த திரைப்படத்தை இயக்க தொடங்கி இருக்கின்றார் சுதா கொங்கரா.
இந்த திரைப்படம் 1965 ஆம் ஆண்டு நடந்த ஒரு உண்மைக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த திரைப்படமும் அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் கெரியரில் ஒரு முக்கிய படமாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள். இந்த திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது மற்றொரு நடிகர் இணைந்திருக்கின்றார்.
அதாவது மலையாளத்தில் பிரபல நடிகராக இருந்து வரும் உன்னி முகுந்தன். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றாராம். அநேகமாக அது வில்லன் கதாபாத்திரம் ஆகத்தான் இருக்கும் என்று கூறி வருகிறார்கள். இந்த செய்தி தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. மேலும் நடிகர் உன்னி முகுந்தன் நடிப்பில் கடைசியாக வெளியான மார்க்கோ திரைப்படம் மலையாளத்தில் சக்கபோடு போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…