மீண்டும் ஜெட் ஸ்பீடில் நயன்… கைவசம் மட்டும் இத்தனை படங்களா?

by ராம் சுதன் |   ( Updated:2024-07-17 18:24:14  )
nayan
X

nayan

கோலிவுட்டில் லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் அடையாளப்படுத்தப்பட்டவர் நயன்தாரா. ஆனால் சமீப காலமாக அவருடைய திரைப்படங்கள் எல்லாமே தோல்வியை தான் தழுவி வருகிறது. இதனால் முன்னணி நடிகர்கள் பட வாய்ப்புகளை நயனுக்கு வழங்குவதில் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இருந்தும் நயன் தற்போது எல்லாம் அடிக்கடி சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார். ஒரு பக்கம் பிசினஸ் ஒரு பக்கம் குடும்பம் என சமாளித்து வந்தாலும், மீண்டும் தன்னுடைய கேரியரை சரி செய்ய நயன்தாராவின் முயற்சிகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது,

அந்த வகையில் நயன்தாரா நடிக்கும் அடுத்த திரைப்படங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்து இருக்கிறது. முன்பு சொன்னது போலவே அவருடைய கைவசம் இருக்கும் படங்களில் மிகப்பெரிய ஸ்டார்களின் படங்கள் பெரிய அளவில் இல்லை. கீது மோகன் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ் ஹீரோவாக நடிக்கும் டாக்சிக் திரைப்படத்தில் நயன் முக்கிய வேடம் ஏற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஆனால் யாஷின் ஜோடியாக நடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சித்தார்த், மீரா ஜாஸ்மீன் இணைந்து நடிக்கும் டெஸ்ட் திரைப்படத்தில் நயன் முக்கிய இடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் முடிந்துவிட்டது. மகாராஜா திரைப்படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் ஒரு படமும், மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நயன்தாரா அடுத்தடுத்து நடிக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.

இதுமட்டுமல்லாமல் கவின் நடிப்பில் உருவாகும் ஒரு படத்தில் நாயகியாகவும் நடித்து வருகிறார். ஐரா படத்தின் இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நயன் நடிக்க இருக்கிறார். அப்படத்தின் கதையை பிரபல விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் எழுதி இருக்கிறார். இப்படத்தினை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story