Categories: latest news

சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திய விக்ரம்..! சுடச்சுட வெளியான சியான் 63 படத்தின் அப்டேட்!..

நடிகர் விக்ரம்:

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சீயான் விக்ரம். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து மெனக்கெட்டு நடிக்க கூடிய ஒரு நடிகர். தற்போது வரை 62 படங்களில் நடித்திருக்கின்றார். இவரது மகன் துருவ் விக்ரமும் நடிக்க வந்துள்ள நிலையில் விக்ரமும் தொடர்ந்து படங்களில் ஹீரோவாக கமிட்டாகி நடித்து வருகின்றார்.

தங்கலான்:

நடிகர் விக்ரம் கடைசியாக இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தில் ஒரு ஆதிவாசி கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரம் தனது மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூல் செய்திருந்தது

வீர தீர சூரன்:

தங்கலான் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் தனது 62 ஆவது திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இப்படத்திற்கு வீர தீர சூரன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இரண்டாவது பாகம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இந்த திரைப்படத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் இரண்டாவது பாகம் முதலில் வெளியாகி முதல் பாகம் அதற்கு அடுத்ததாக வெளியாக இருக்கின்றது.

சியான் 63:

நடிகர் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மண்டேலா மற்றும் மாவீரன் உள்ளிட திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர் மடோன் அஸ்வின். இவர் இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் நடிகர் விக்ரம் நடிக்க இருக்கின்றார்.

இப்படத்தில் நடிகர் யோகி பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், சாந்தி டாக்கிஸ் நிறுவனம் சார்பாக அருண் விஷ்வா இப்படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் மண்டேலா திரைப்படத்திற்கு இசையமைத்த பரத் சங்கர் இப்படத்திற்கு இசையமைக்கின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க உள்ள நிலையில் வருடத்தின் முடிவில் இப்படத்தை வெளியிடுவதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள். மேலும் நடிகர் விக்ரம் இந்த திரைப்படத்திற்கு தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கின்றார். தங்கலான் படத்திற்கு 30 கோடி சம்பளம் வாங்கிய சியான் விக்ரம் இந்த படத்திற்கு 50 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

ramya suresh

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

11 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

12 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

12 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

14 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

19 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

21 hours ago